Rishabam: ரிஷபம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. பிரச்சனைகள் எல்லாம் ஓடிப்போகும் காலம்
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷபம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும்.

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் மார்ச் மாத பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் உச்சத்தை அடைவதால் எல்லா முன்னேற்றங்களும் ஏற்படும் காலகட்டம். முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். பெரிய அளவில் பண வரவு உண்டாகும். ராசிநாதன் 11 ஆம் இடத்திலேயே உச்சத்தை அடையவுள்ளார். சூரியனும் 11 ஆம் இடத்திற்கு வருவது மிகப்பெரிய நல்ல அமைப்பாகும். அம்மாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பிரச்சனைகள் நீங்கும்
வீடு விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், வண்டி வாகனம் வாங்குவதில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குறைகள் நீங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும், 2 ஆம் இடத்தில் குரு, 11 ஆம் இடத்தில் உச்ச சுக்கிரன் இருக்கின்றனர். ராசிநாதனான சுக்கிரன் உச்ச அமைப்பில் இருப்பதால் நன்மைகள் ஏராளமாக ஏற்படும்.
புரோமோஷன்
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கக்கூடிய அமைப்புள்ளது. வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். மற்றவர்களை நம்பி இறங்கி ஏமாற்றமடைந்த நபர்களுக்கு அந்த விஷயங்களில் வெற்றிகள் உண்டாகும் நல்ல மாதம்.
பணவரவு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றியடையும் யோகம் உண்டு. இழந்தவை எல்லாம் மீண்டும் மீட்டெடுக்கும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.
தொழிலில் முன்னேற்றம்
மார்ச் மாதம் முழுவதுமே செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். கூட்டுத்தொழிலில் வரும் 15 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்கள், நிரந்த வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு, அரசு உரிமம், ஒப்பந்தம் போன்ற அரசாங்க ஆதரவுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும் அமைப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications