Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. கடனில் இருந்து விடுதலை
Rishabam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Rishabam Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சிக்கல்களில் இருந்து விடுபடும் யோகம் உண்டு. இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். தனிப்பட்ட முறையில் இருந்து வந்த கடன்கள் அனைத்தும் நீங்கும்.
கடன் தீரும்
கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மன அழுத்தம், மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தொழிலில் மாற்றம், புரோமோஷன், தொழிலில் இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாவது, புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் ஏற்படும்.
ஆரோக்கியம்
பல், வாய் பகுதியில் ஏற்படும் சிறிய பாதிப்புகளுக்கும் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் உண்டு. நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் பலரால் பாராட்டப்படக் கூடிய அமைப்பு உள்ளது.
முன்னேற்றம்
அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வண்டி, வாகனங்கள், கடன் அமைப்புகளில் இருந்து வந்த பாதிப்புகள் சுமூகமாக முடியும். நீண்ட நாள் பிரச்சனைகள், பாதிப்புகள் நிவர்த்தியாகும் அற்புதமான காலகட்டமாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பலவிதத்தில் நன்மைகளும், அனுகூலமும் ஏற்படும் அமைப்பு உள்ளது.
விபத்து
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். தேவையில்லாத பயம், மனக் கசப்புகள், குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவது, வாகன விபத்துகள் வரும் வாய்ப்புள்ளது. பெண்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் எல்லாமே 25 ஆம் தேதிக்குப் பிறகு தான் நடக்கும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய பணம், ஆண்கள் மூலமாக நடக்க வேண்டிய சந்தோஷமான விஷயம், வேலை கிடைப்பது, அரசாங்க உத்தியோகம் கிடைப்பது போன்ற யோகங்கள் உண்டு. மாணவர்கள் மதிப்பெண்கள் நன்றாக எடுத்தாலும் நிறைய குழப்பங்கள் இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம், பொருளாதார ஏற்றம் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications