Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம்
Rishabam Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம் காணப்படும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாதவற்றை யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நவக்கிரகத்தில் உள்ள சுக்கிரன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பண வரவு, நல்ல காரியம், பழைய கடன்களை அடைத்து முடிப்பது போன்ற யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் சரியாகும்.
புதிய வேலை
நல்ல வேலைகள் கிடைக்கும் யோகம் உள்ளது. புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வியாபாரம் நன்றாக இருக்கும். படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வேலைவாப்புக்காகச் சென்றவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கூட்டாளிகள் கிடைப்பது, புதிய தொழில் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். எல்லாவிதமான ஏற்றமும் உண்டாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பெரிய சந்தோஷம் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் மாறும். உத்தியோகத்தில் நிறைய நன்மைகள் ஏற்படும். மனதிற்குப் பிடித்த நல்ல விஷயங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். லாபத்தில் சூரியன், செவ்வாய் இருப்பதால் நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். மூத்தவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எல்லாமே உங்களுக்கு நல்ல விஷயங்களாக நடக்கும்.
பணவரவு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவிற்கு எந்த குறைவும் இருக்காது. தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 75 சதவீதமும் நன்றாக இருக்கும். அரசியலில் கூட்டாளிகள் இருந்து வந்த பிரச்சனை, நண்பர்களால் இருந்து வந்த பாதிப்புகள் என உங்களுக்கு எதிராக இருந்த விஷயங்கள் எல்லாம் மாறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்..1 விஷயத்தில் ரொம்ப கவனம் -
Tamil Puthandu Palan: சிம்மம் ராசிக்கு பராபவ வருடம் எப்படி?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்! -
ரிஷபம் ராசிக்கு இந்த ஆண்டில் அடிக்கும் ஜாக்பாட்?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்! -
Tamil Puthandu Palan: மிதுனம் ராசிக்கு அதிரடி மாற்றங்கள்!.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம் -
தமிழ் புத்தாண்டு பலன்: சிக்ஸர் அடிக்கப் போகும் விருச்சிகம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு கோடீஸ்வர யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. புத்தாண்டில் கிடைக்கும் பலன்கள்? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications