சொல்லி அடிக்கப் போகும் ரிஷப ராசி.. புதிய திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறும் காலம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றமும், அனுகூலம் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். பதவி உயர்வு கிடைக்கும். அடிவயிறு, கழிவுகள், கீழ் முதுகுத் தண்டவடம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நன்மை பயக்கும்.
தொழில்
தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் காலகட்டம். முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்டநாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடு நீங்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண நலம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் செய்யும் புதிய புதிய விஷயங்களை கைகொடுக்கும். உத்தியோக்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
தடைகள் நீங்கும்
முதலீடுகளுக்கு குறைவிருக்காது. நல்ல அனுகூலமும், ஏற்படும் காலகட்டமாக இருக்கும். அனைத்து விதமான முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாலினத்தவரால் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
யோக பலன்கள்
அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய ஏற்றம் கிடைக்கும். மன திருப்தி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கப் பெறும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
திருமணம்
கடல் கடந்த உத்தியோகம், தொழில், வியாபாரம், முதலீடு சம்பந்தப்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கும். ஏற்றமும், அனுகூலமும், நம்பிக்கையும் ஏற்படும் காலகட்டம். இளைஞர்களுக்கு படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திருமணத்தில் சிறு சிறு தடைகள் வரும். அபிராமி அந்தாதியில் வரும் 17, 35 ஆவது பாடலை படிப்பது நன்மையை ஏற்படுத்தும். வியாழக்கிழமை தோறும் ராகவேந்திரர் வழிபாடு அனைத்துவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications