மிதுன ராசிக்கு 2 லட்டு தின்ன ஆசையா.. திடீர் ராஜயோகம்.. முதலீடு விஷயத்தில் ரொம்ப கவனம்
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் மிதுனம் ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் மிதுன ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு கோச்சாரத்தின்படி அருமையான காலகட்டமாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் மேல் ஜென்ம குருவாக இருக்கிறார். சனி பகவான் ராசிக்கு 10 ஆம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் மார்ச் 29 ஆம் தேதி முதல் இருந்து கொண்டிருக்கிறார். ராசிக்கு மூன்றாம் இடத்தில் கேது பகவானும், 9 ஆம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார்.
மிதுனத்துக்கு சனி பகவான் அஷ்டமாதிபதியாக வருகிறார். ராசியாதிபதி புதன், சனிக்கு நண்பன் என்பதால், ராசிக்கு பாக்கிய ஸ்தானம் எனும் அமைப்பை பெறுவதால் சனி பகவான் உங்களுக்கு நன்மையையே செய்வார். கர்ம ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் வேலை, தொழில், முயற்சி, அடுத்த செய்ய வேண்டிய ஆர்வத்தை தூண்டிவிடுவார். உங்களுடைய உழைப்பை அதிகப்படுத்தும் வாய்ப்பைக் கொடுப்பார்.
அனுகூலம்
உத்தியோக ஸ்தானத்தில் சனி அமருவதால் உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடன் கட்டுக்குள் இருக்கும் காலமாகவும், சமாளிக்கும் காலமாகவும் இருக்கும்
கவனம்
ராசிக்கு கேந்திர ஸ்தாதிபதியான குரு பகவான் ராசிக்கு 7 ஆம் இடத்தையும், 9 ஆம் இடத்தையும், 5 ஆம் இடத்தையும் குரு பார்ப்பதால் பூர்வ புண்ணியம், திருமண வாழ்க்கை, பாக்கியம் ஆகிய மூன்று விஷயங்களிலும் நல்லதைக் கொடுப்பார். குருவால் நிறைய நன்மைகள் கிடைக்கப் போகின்றன. ஜென்மத்தில் குரு இருப்பதால் முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் மனக் குழப்பங்கள் ஏற்படும்.
குரு பார்வை
திட்டங்களை சரியாக வகுக்க கூடியவர்களாக இருந்தாலும் இரண்டு புத்தி உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆதாயத்தை அடையும் போது வெளியில் வருவதும், ஆதாயத்துக்காக காத்திருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வாய்ப்புகளை சரியாக கவனித்து பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலையை விடக்கூடிய சூழல் ஏற்படும். இருந்தாலும் அதைவிட நல்ல பலனை குரு கொடுப்பார். அதில் நல்ல வெற்றியையும் காண்பீர்கள்.
சனி 10 ஆம் இடத்தில் இருப்பது நல்ல அமைப்பு. 4இல் இருக்கும் கேது 3க்கு வருவதால் சிறப்பான காலகட்டமாக இருக்கும். 9 இல் இருக்கும் ராகுவுக்கு குருவின் பார்வை கிடைப்பதால் எல்லாமே மிதுனத்துக்கு சிறப்பானதாக இருக்கும். முயற்சியும், எண்ணமும், திட்டமும் சரியாக இருந்து, சுய ஜாதகத்திலும் நிலை சரியாக இருந்தால் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
ராகு பகவான் 9 ஆம் இடத்தில் இருப்பதால் தந்தை வழி சொத்துகள் வந்து சேரும். அப்பாவிற்கு வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். குலதெய்வ வழிபாடு, நேர்த்திக் கடன்கள் செய்வது, கோயில் திருப்பணிகள் செய்வது போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள். கேது ராசிக்கு 3 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் முயற்சிகளில் சிறு சிறு தடைகள், குழப்பங்கள் வந்து போகும். செய்யும் செயல் மீது நம்பிக்கையின்மை ஏற்படும் வாய்ப்புள்ளது.
வெற்றி
இளைய சகோதரர்களால் மன உளைச்சல்கள் நண்டாகும். வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்ற முடியாமல் தவிர்ப்பீர்கள். ஆனாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் சாதிக்கும் காலகட்டமாகத்தான் இருக்கும். அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட விஷயங்கள் தீர்ந்து அதில் வெற்றிகளைக் காண்பீர்கள். சரியான பாதையில் சரியான இடத்துக்குச் செல்வீர்கள்.
மேன்மை
மிதுன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு இடமாற்றம் அடுத்தகட்ட உயர்வு கட்டாயம் கிடைக்கும். 6 ஆம் இடம் மிகவும் நன்றாக இருக்கிறது. எதிரிகள், சூழ்ச்சி, கடன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாது. பெண்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளால் நன்மைகளையும், மேன்மைகளையும் அடைவீர்கள்.
ஆரோக்கியம்
சர்க்கரை, மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உடல் நலனுக்கேற்ற உணவுகளை கடைப்பிடிப்பது நல்லது.












Click it and Unblock the Notifications