இதை மட்டும் கடைபிடிச்சா தனுசு ராசிக்கு ராஜயோகம்.. சனிப்பெயர்ச்சியில் செம அதிர்ஷ்டம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 29 ஆம் தேதி) சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு - தனுசு ராசிக்கு சனி பகவான் நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். மிதுன ராசியில் இருந்த குரு நேரடியாக உங்கள் ராசியை பார்ப்பதால் சிறப்பான பலன்கள் கிடைக்க போகின்றன. நீங்கள் எங்கிருந்தாலும் தனித்த அடையாளத்துடன் தெரிவீர்கள். தெளிவாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பீர்கள். இந்த காலத்தில் உங்களின் திறமை முழுவதுமாக வெளிப்படும்.
அதிர்ஷ்டம்
திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக சொந்த வீடு கனவில் இருப்பவர்கள், இந்த காலத்தில் சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. கடல் கடந்து வெளிநாடு செல்வதற்கான அதிர்ஷ்டம் உண்டாகும். பணி, வீடு மாற்றங்கள் நிகழும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
பண வரவு
பண வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு பல மடங்கு உயரும். அந்தியர்களால் ஆதாயம் உள்ளது. முன்னேற்றத்துக்கான பாதையை வகுப்பீர்கள். உத்யோகம், தொழில் இரண்டிலும் வெற்றி மேல் வெற்றி குவியும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயர்வு இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.
புகழ்
தாய் வழி உறவால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் புகழ் பரவும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் முன்னேற்றத்துக்கு தகுந்த முக்கிய பயிற்சிகளை எடுப்பீர்கள்.
மதிப்பெண்
தொழில், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 95 சதவீதம் சிறப்பாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
ரத்த உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் திட்டம் நிறைவேறும் வரை அதை ரகசியமாக வைத்திருப்பது நல்லது. உடலில் உப்பு சத்து அதிகரிக்கும். இதயம் சார்ந்த பிரச்னைகளில் கவனம் தேவை. அதனால் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுயக்கட்டுப்பாடு அவசியம். தாயின் உடல் நலத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம், வழிபாடு
உங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் அல்லது ஏதாவது அம்மன் வழிபாடு தடைகளை விலக வைத்து நல்ல பலன்களை கொடுக்கும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications