கண்டகச் சனியில் சிக்கும் கன்னி.. சனி பகவான் அள்ளி கொடுப்பாரா? கெடுப்பாரா?.. இதுல மட்டும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்ம ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Virgo

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 6 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்துக்குச் செல்கிறார். கண்டகச் சனியாக வருகிறது. 6 இல் இருந்த சனி பகவான் உடல்நலக் குறைபாடு, எலும்பு முறிவு, விபத்து போன்ற பிரச்சனைகளை கொடுத்திருப்பார். ராகு 6 ஆம் இடத்துக்கும், 7 ஆம் இடத்துக்கு சனியும் இடம் பெயருகின்றனர். 6 இல் வரக்கூடிய ராகு தன விருக்தியை கொடுப்பார்.

இதுவரை விபத்து, உடல்நலக் கோளாறால் பாதிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு 7 ஆம் இடத்துக்கு வரும் சனி பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். மருத்துவச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கணவன், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரும். ஜென்மத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் 12 ஆம் இடத்துக்குச் சென்று ராகு 6 ஆம் இடத்துக்கு வரும்போது அபரிமிதமான பண வரவைக் கொடுத்தாலும், 12 ஆம் இடத்துக்கு வரும் கேது விரைய செலவுகளை ஏற்படுத்துவார்.

குடும்ப ரீதியாக சகோதர, சகோதரிகளால் ஏற்படக்கூடிய கடன் பிரச்சனைகள் உங்களுக்கு தலைவலியாக மாறும். அவர்களின் கடன், மருத்துவச் செலவுகள் உங்களை பாதிக்கும். பொறுப்பையும், பாரத்தையும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். பத்தாம் இடத்தில் குரு பகவான் வருவதால் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் பணத்தை சேமித்து வைப்பது நல்லது.

கன்னி ராசியில் இருக்கக்கூடிய உத்திரம் நட்சத்திரக்காரர்கள் உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு மன நிம்மதி இருக்கும். கேது பெயர்ச்சிக்குப் பின்னர் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபத்தை குறைப்பது நல்லது. அதிக அளவில் வாக்கு வாதம் செய்வது. உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. கன்னி ராசி நேயர்களுக்கு இந்த சனி கண்டகச் சனியாக வருவதால் திருமண விஷயங்கள், காதல் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் வருவதற்கோ, இல்லை உறவு முறிவதற்கோ வாய்ப்புள்ளது. புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வியாபாரிகள், தொழில் செய்வோர் புதிய ஒப்பந்தகளை லீகலைஸ் செய்து கொள்வது நல்லது. வாய் வழி உத்தரவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் கொஞ்சமாக கடன் வாங்குவது நல்லது. மார்ச் 29 முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெண்கள் கணவருடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை செய்யும் பெண்களுக்கு சில இடமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையை ரிசைன் செய்யும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்து ஆலோசனைகளை கேட்பது நல்லது.

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அச்சப்படக் கூடிய சூழல் இல்லை. ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம், பண விஷயங்கள், கணவன் மனைவி, காதலிப்பவர்கள் தங்களுடைய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழப்பமான சூழ்நிலையை கொடுத்தாலும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் தெளிவான சூழல் உண்டாகும்.

பரிகாரம் - ஒவ்வொரு அஷ்டமியன்றும் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது நல்லது. சனி ராகு கேது குரு ஆகிய கிரகங்களுக்கு இந்த பரிகாரங்கள் மிகவும் சிறப்பானது. ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் இந்த பரிகாரங்களை செய்யலாம். இதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய குழப்ப சூழ்நிலைகள் சரியாகும்.

அமாவாசை, பெளர்ணமி தினங்களில் சரபேஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடுவது, கடன் பிரச்சனைகள், வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+