சனிப்பெயர்ச்சி: சனியிடம் சிக்கும் மேஷம் சிம்மம் மீனம்.. யாராலும் காப்பாத்த முடியாது.. இதை செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் அன்றைய தினம் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் சனியின் பிடியில் சிக்கும் மேஷம், சிம்மம், மீனம் ராசியினர் எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதைச் செய்தால் சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகின்றனர். நீதி, நேர்மை, தர்மத்துக்கு காரணியான சனி பகவான் சுப பலன்களையும், அசுப பலன்களையும் சரிசமமாக வழங்கக் கூடியவர். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். இரண்டரை ஆண்டுகாலம் அந்த ராசியில் இருப்பார்.

sani peyarchi sani peyarchi 2025 Sani peyarchi rasi palan

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். பொதுவாக சனிப்பெயர்ச்சி என்றாலே எல்லோரும் அச்சப்படுவார்கள். ஆனால், அவ்வாறு அச்சப்படத் தேவையில்லை. சனி ஒரு சில ராசியினருக்கு மட்டுமே அசுப பலன்களைக் கொடுப்பார். மற்ற ராசிகளுக்கு அள்ளிக் கொடுப்பார். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து படிப்பினைகளையும் கற்றுக் கொடுக்கும் காலகட்டமாக சனிப்பெயர்ச்சி காலம் இருக்கும்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் சனியில் பிடியில் சிக்கும் ராசிக்காரர்கள் குறித்தும், எந்தவிதமான சிக்கல்களை எல்லாம் சந்திக்கப் போகிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. ராகுவின் இடத்தில் சனியும், சனியின் இடத்தில் ராகுவும் செல்கின்றனர். நினைத்த காரியங்கள் வெற்றி அடையாமல் போனது, வம்பு வழக்கு அபராதம் கட்டி வந்த சூழல் இருந்திருக்கும். அந்த காலகட்டங்கள் மாறும். அவமானம், அவச் சொல்லில் இருந்து விடுதலை கிடைக்கும். பிரிந்த உறவுகள் மீண்டும் வந்து சேருவார்கள். வேலையில் அதிக அளவிலான பயணங்கள் மேற்கொள்வதற்கான காலகட்டமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். யாரையும் நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது.

உங்களுடைய கோபத்தைக குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு விஷயங்களைச் செய்தாலும் அதனை கவனமாகச் செய்வது நல்லது. பண விஷயங்களில் ஏமாறுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இரவில் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுய ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் சொந்த தொழில் செய்வதற்கான யோகம் உண்டாகும்.

சிம்மம் - சிம்ம ராசியினர் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கான யோகம் உண்டு. மருத்துவச் செலவுகள் ஏற்படும், மனக் குழப்பங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்குள் வெளி மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உணவு சாப்பிடுவதில் கவனம் தேவை.

கோபத்தை தவிர்ப்பது நல்லது. இனிமையான சொற்களைப பேசுவது நல்லது. ரகசியங்களைக் கட்டிக் காப்பது நன்மை பயக்கும். வெளியில் சொன்னால் ஆபத்து. புதிய தொழில், வியாபாரம் போன்றவை தொடங்குவதற்கு இந்த காலகட்டம் ஏற்றதல்ல. எச்சரிக்கையான காலகட்டமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு பாதிப்புகளில் இருந்து காக்கும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு ராசியில் இருந்து ராகு பகவான் வருவது நல்லது. ஆனால், ராசிக்கு சனி வருவது கெடு பலன்களைத் தரும். பெற்றோர் வகையில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இழப்புகள் ஏற்படும். 3 ஆம் இடத்தில் உள்ள குரு 4 ஆம் இடத்திற்குப் போவதால் திருமண யோகம் கைகூடும். சொந்த ஊரில் தொழில் தொடங்குவது, வெளியூரிலிருந்து சொந்த ஊரில் தொழில் தொடங்குவது நல்ல பலன்களைத் தரும்.

சொத்துகள் வாங்குவது, தொழில் தொடங்குவது, காதலிப்பவர்களுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும், கார் வாங்குவதற்கான யோகம் உண்டு. எந்தவொரு விஷயமானாலும் வீண் விவாதம் செய்யாமல் கடந்து செல்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+