தங்க நகையை குவிக்கப் போகும் கும்ப ராசியினர்.. இனி அசுர வளர்ச்சிதான்.. வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறார். எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறப் போகிறது. கும்ப வீட்டில் இருக்கும் சனி மீனம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.

sani-peyarchi-for-kumbam-lets-see-what-kind-of-benefits-will-get-kumbam-aquarius-pepole-on-sani-p

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி வரும் சனிப்பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறது. தெய்வ வழிபாடு, யோக பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள் 2 ஆம் இடத்தில் சனி வந்து அமர்வதால் பேசும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சை கட்டுப்படுத்தினாலே பிரச்சனைகள் வராது. கடந்த இரண்டரை வருடங்களில் ஜென்மசனியால் கும்ப ராசியினருக்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள், மூத்த பெண்களுக்கு நிறைய செலவுகள் உண்டாகியிருக்கும். சளி தொந்தரவு, காய்ச்சல், அலைச்சல்கள் ஏற்பட்டிருக்கும். எதிலும் நிலையில்லாத தன்மை இருந்திருக்கும். சோம்பல் உண்டாகும்.

இனி உங்களுக்கு பொன்னான காலகட்டமாக இருக்கும். ராசிக்கு ராகு வருவதால் கும்ப ராசியினர் அசுர வளர்ச்சியை பெறப் போகின்றனர். 2 ஆம் இடத்தில் சனி வந்து அமர்வதால் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பணத்துக்குப் பஞ்சம் ஏற்படாது. பணம் வந்து கொண்டே இருக்கும். ஆனால், பிச்சு பிச்சு வந்து சேரும்.

மெட்டல் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு உதாரணமாக பாத்திரக் கடை, நகைக் கடை, தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்களுக்கு அருமையான காலகட்டம் இது. முகத்தில் சிறு பிரச்சனைகள் வந்து உங்களுக்கு சரியாகும். 2 ஆம் இடத்தில் சனி வருவதால் மற்றவர்களைப் பேச்சு கேட்டு செயல்படுவது நல்ல பலன்களைத் தரும். அம்மாவுடைய பேச்சைக் கேட்டு செயல்படுவது எல்லாமே வெற்றியைத் தரும்.

வீடு வாங்குவது, நகை வாங்குவது, கையிருப்பு பணம், வெள்ளி சேர்க்கும் பிராப்தம் உண்டாகும். ஒன் கிராம் கோல்டு, நகை பிசினஸ் நல்ல முன்னேற்றதை தரும். திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். நல்ல ஒரு காலகட்டமாக இருக்கும். பல், ஈறு, மூக்கு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. கும்பத்துக்கு அருமையான காலகட்டம்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயம்:- சேமிப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் கரைவதற்கான வாய்ப்புள்ளதால் சேமிப்பு நல்லது. செலவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு.

பரிகாரங்கள்:- அருணாசலேஸ்வரரை பெளர்ணமி தினத்தன்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

மதிப்பெண்:- சந்தோஷத்தின் அடிப்படையில் 70 சதவீதம் நன்றாக இருக்கும். பொருளாதார அடிப்படையில் 100க்கு 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+