Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி: கன்னிக்கு கண்டகச் சனி அச்சம் தேவையில்லை.. கிடைக்கும் பலன்கள் முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

Sani peyarchi Kanni

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கன்னி ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்படம் போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 7 ஆம் இடத்தில் கண்டகச் சனி வருகிறது. கண்டம் என்பது கழுத்து. நீண்டகாலமாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். காதலிப்பவர்களுக்கு பிரிவு ஏற்படும். திருமணம் தாண்டிய உறவுகளில் இருப்பவர்களுக்கு கட்டாயம் பிரிவு ஏற்படும். நீண்டகாலமாக பிரிந்திருக்கும் கணவன், மனைவி சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

நீண்டகாலமாக பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பள்ளி கல்லூரி நண்பர்களுடன் நல்ல நட்புறவு மீண்டும் துளிர்க்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். அதன் மூலம் வெற்றி, லாபம் கிடைக்கும். சமுதாயத்தல் உறவினர்கள், வேலை செய்யக்கூடிய இடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளில் காதல் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உண்டு. திருமணமான கணவன், மனைவிக்கு நிறைய சண்டை, சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. திடீரென்று எதிர்பாராத விபத்து, கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். கண்டகச் சனியில் கவனக் குறைவால் விபத்து கட்டாயம் ஏற்படும். மற்றவர்கள் காரணமில்லாமல் உங்களுக்கு விபத்து, கீழே விழுந்து காயம் ஏற்படும் அமைப்பு உள்ளது.

மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கண்டகச் சனி வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளைக் கொடுக்கும். 7 ஆம் இடம் என்பது எதிர்பதம். அடுத்தவர்களை திறம்பட வேலை வாங்கி, அடுத்தவர்கள் மூலமாக நிர்வாகம் செய்ய முடியாது. தொழில் செய்யக்கூடிய கண்டகச் சனிக்காரர்கள் வேலை ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை ஆட்கள் ஏமாற்றுவதற்கான வாய்ப்புள்ளது.

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் வேலை ஆட்கள் வேறு வேலைக்குச் செய்யும் நிலை இருப்பதால் அவர்களை பார்த்துக் கொள்வது நல்லது. 80 சதவீத எதிர்மறையான பலன்களை சனி பகவான் கொடுத்தாலும் தொழிலில் உங்களுக்கு லாபத்தைக் கொடுப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+