சனி வக்ர பெயர்ச்சி பலன்..தலைகணத்தில் ஆடினால் தலையில் தட்டி தடுமாற வைப்பார்..5 ராசிக்காரர்கள் உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்ப ராசியில் உள்ள சனிபகவான் சில ராசிக்காரர்களை படாத பாடு படுத்தி வருகிறது. அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட வேண்டும் என்பதற்காகவே சனிபகவான் வக்ரமடைந்து சற்றே பின்னோக்கி நகர்ந்து மகர ராசிக்கு இன்னும் சில மாதங்களில் செல்லப்போகிறார். சனிபகவான் 5 மாதங்களுக்கு மேலாக மீண்டும் மகர ராசியில் பயணம் செய்வதால் யாரெல்லாம் அதிக பலன்களையும், ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்? எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பார்க்கலாம்.

வாக்கியப்படி சனி வக்ரம்: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் ஆவணி மாதம் 7ஆம் தேதி ஆகஸ்ட் 24 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.46 மணிக்கு வக்ர கதியில் கும்ப ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார். மார்கழி மாதம் 4ஆம் தேதி டிசம்பர் 20,2023 ல் மீண்டும் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த தேதியில்தான் திருநள்ளாறு சனி பகவான் கோவில்களில் சனி பெயர்ச்சி சிறப்பு பூரஜகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கணிதம்: நம்முடைய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி சொல்லப்படுகிறது. சனி பகவான் இந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ரமடைகிறார். 2023 அக்டோபர் 17ம் தேதி சனி வக்ர நிலையில் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். 2023 நவம்பர் 4ம் தேதி நண்பகல் 12:45 மணி முதல் சனி வக்ர நிவர்த்தி அடைந்து அவிட்ட நட்சத்திரத்தில் மீண்டும் நேர்கதியில் பயணத்தை தொடங்குவார். நவம்பர் 22ம் தேதி காலை 7.39 மணி முதல் சனி பகவான் கும்ப ராசிக்கு மாறுவார்.

Sani Peyarchi Palangal 2023: Sani Vakra peyarchi Palan Anyone should be careful

மேஷம்: சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடைபெறும். குழந்தைக்காக தவமிருக்கும் தம்பதியினருக்கு கை மேல் பலன் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. வீண் விரைய செலவு செய்யாமல் தான தர்மங்கள் செய்யுங்கள். குச்சனூர் சென்று ஒருமுறை சனிபகவானை வழிபட்டு வர சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 9ஆம் வீட்டிற்கு பாக்கிய சனியாக வரப்போகிறார். சனிபகவான் உங்கள் யோகாதிபதி. பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நிறைய தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

மிதுனம்: சனிபகவான் மீண்டும் எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். கடந்த பல ஆண்டு காலமாகவே சனிபகவானால் நீங்கள் கஷ்டங்களையே அனுபவித்து வருகிறீர்கள். சில மாதங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு நிமிரும் முன் மீண்டும் சனி வக்ரகதியில் எட்டாம் வீட்டிற்கு வருகிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் 5 மாதங்களை கவனமாக கடந்து விடுவீர்கள்

கடகம்: கடகம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். அஷ்டம சனி வந்து சில மாதங்களிலேயே படாத பாடு பட்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும். சனிபகவான் மீண்டும் உங்க ராசியை பார்ப்பதால் கவலை வேண்டாம். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். சச யோகத்தை தரப்போகும் சனிபகவானால் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள்.

சிம்மம்: சனி பகவான் மீண்டும் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். உங்கள் ராசி அதிபதி சூரியனுக்கு சனிபகவான் எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும் வரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கன்னி: சனிபகவான் 5ஆம் வீட்டிற்கு வக்ர நிலையில் அமரப்போவதால் பூர்வஜென்ம புண்ணியங்கள் கிடைக்கப்போகிறது. நல்லது அதிகம் நடக்கும். வேலையில் சிரமத்தை சந்திப்பவர்களுக்கு பிரச்சினை நீங்கும்.இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

Sani Peyarchi Palangal 2023: Sani Vakra peyarchi Palan Anyone should be careful

துலாம்: துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் மீண்டும் சசயோகம் கிடைக்கப்போகிறது. சனியின் பத்தாவது பார்வை உங்களுடைய ராசி மீது விழுவதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும் வண்டி வாகனம் வாங்குவீர்கள். அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். அதே நேரத்தில் அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது அவசியம்.

விருச்சிகம்: விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. ஏழரை ஆண்டுகாலமாக சனி விருச்சிகத்தை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம்.வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.

தனுசு: சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டீர்கள். ஏழரை சனி விலகியது. மீண்டும் அதே இடத்தில் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. அதே நேரத்தில் குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கடந்த கால கஷ்டங்கள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. தொழில் வியாபாரத்தில் நல்ல தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடுவீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்களே..உங்களுக்கு மீண்டும் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அகலக்கால் வைக்காதீர்கள் ஆபத்தாகிவிடும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். குரு பெயர்ச்சியும் ராகு கேதுவும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சனியின் வக்ர காலத்தை எளிதாக கடந்து விடுவீர்கள்.

கும்பம்: கும்பம் ராசிக்கு ஜென்ம சனியாக இருந்த சனிபகவான் மீண்டும் விரைய சனியாக ஏழரை சனியாக தொடங்குகிறது. நிறைய செலவு செய்திருப்பீர்கள். அதிக கடன் வாங்கியிருப்பீர்கள். சனி பகவான் உங்க ஆட்சிநாதன். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும் என்பதால் சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது. சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார். திடீர் பண வரவு வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியது. வக்ர காலத்தில் சனி மீண்டும் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். மன அழுத்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+