Sani Peyarchi: கன்னி ராசிக்கு கண்டகச் சனி.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?.. முழு பலன்கள் விவரம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கன்னி ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். மீனம் உங்கள் ராசிக்கு 7 ஆம் பாவம். 7 ஆம் இடம் என்பது களத்திர ஸ்தானம். அந்த இடத்தில் சனி போய் அமருவதால் கண்டகச் சனி என்று இது அழைக்கப்படுகிறது. இந்த கண்டகச் சனி காலகட்டத்தில் 3 விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை இருப்பவர்கள் சரியான உணவு முறை, மருந்து மாத்திரகைளை உட்கொள்வது, மன அழுத்தம் இல்லாத தூக்கம் போன்றவற்றை கடைப்பிடிப்பது நல்லது. சிறிய சிறிய உபாதைகள் இருந்தாலும் இதற்கான உரிய மருத்துவத்தைப் பெற்றுக் கொள்வது நன்மை பயக்கும்.
பயணத்தில் கவனம்
இதுவரை எந்தவித ஆரோக்கிய பிரச்சனைகளும் இல்லை என்பவர்களுக்கு, தற்போது நிறைய எலும்பு சார்ந்த பிரச்சனைகள், ஜீரணப் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உரிய மருத்துவம் பெற்றுக் கொள்வது நல்லது. பயணம், பயணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வெளிப்படைத் தன்மை
எந்தவொரு விஷயத்தை செய்தாலும் அதை திறமையாக செய்வீர்கள். நீங்கள் நன்றாகவே சென்றாலும் மற்றவர்களால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆம் பாவம் என் களத்திர ஸ்தானம். கணவன், மனைவி இருவரும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது நல்லது. இல்லையெனில் சிறு சிறு விரிசல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், வெளிப்படைத் தன்மையோடு இருப்பது நல்லது.
சனி பார்வை
சனியின் பார்வை 1, 4, 9 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் தேவையில்லாத டென்ஷன், அழுத்தம், பிரஷர், எரிச்சல், சங்கடங்கள் போன்றவை ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும். எப்போது தான் அலைச்சல் ஓயும் என்கிற நிலை ஏற்படும். அம்மாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அப்பாவுக்கும், உங்களுக்கும் இருக்கும் தவறான புரிதல்கள் எல்லாம் தீர வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்.
நீங்கள் நினைக்கும் எல்லா விஷயங்களும் ஒருமுறைக்கு இருமுறை முயற்சித்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். சனி 5, 6க்கு அதிபர். பெரிய அளவுக்கு கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் நட்பாக பழகுவது நல்லது. 100க்கு 60 சதவீதம் நன்மையைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications