Sani Peyarchi: துலாம் ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் [Thulam Sani peyarchi palan]

துலாம் ராசியினருக்கு இதுவரை 5 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 6 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 6 ஆம் இடம் என்பது சத்ரு ஜெயம், ரோக ஜெயம். நிறைய அனுகூலங்கள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-thulam-rasi-libra-people-in-this-sani-peyarchi-perio

மாற்றம், முன்னேற்றம்

இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும். பூர்வீகத்தில் வீட்டை இடித்து கட்டுவீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். தைரியம் ஏறபடும். துணை விஷயத்தில் மனம் விட்டுப் பேசிக் கொள்வது நன்மை பயக்கும்.

தடைகள் நீங்கும்

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மையைத் தரும். பிள்ளைகளின் படிப்புத் தடை, உத்தியோகத் தடை என பல்வேறு தடைகள் இருந்தாலும் அவை எல்லாம் படிப்படியாக மாறும். 5 ஆம் இடத்தில் ராகு இருப்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் வரை அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது அற்புதமான அமைப்பைத் தரும்.

ஆரோக்கியம்

அடிவயிறு, கழிவுப்பாதை, முதுகு தண்டுவடம், தோல் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அடிமை தொழிலில் இருந்த தனிப்பட்ட தொழிலைத் தொடங்கும் யோகம் உண்டாகும். நிறைய ரிஸ்குகளை எடுக்கும் காலகட்டம். நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்த தொழில்களை தொடங்கி செய்து முடிப்பீர்கள். பெரிய வெற்றிகளைப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.

சனி உச்சம்

6 ஆம் இடத்தில் வருவதால் அனைத்து விஷயங்களிலும் ஜெயம் ஏற்படும். புதுமையான அமைப்புகள் ஏற்படும். சோம்பல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. துலாமில் சனி உச்சம் பெறுவதால் தினந்தோறும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய தலைமைப் பண்புக்கு வரும் யோகம் உண்டாகும். வழக்கறிஞர்கள், காவல் துறையினர், அரசியல், நீதித்துறை போன்ற சீருடைப் பணியாளர்களுக்கு பெரும் கெளரவம், ஜனாதிபதி விருது போன்றவை கிடைக்கும் யோகம் உண்டாகும்.

பரிகாரம்

தஞ்சாவூரில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் 38 எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து 5 பழத்தை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வர வேண்டும். பட்டீஸ்வரர் துர்க்கை படத்திற்கு அகல்தீபம் ஏற்றி வழிபாடு செய்வது விசேஷமான பலன்களைத் தரும். மாதத்திற்கு ஒரு செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் புற்று உள்ள அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+