அண்ணாமலை, விஜய்க்கு அஷ்டம சனி.. வார்த்தைகளில் கவனம்.. எச்சரிக்கும் ஜோதிடர்.. எப்போது சரியாகும்?
சென்னை: பேசும் வார்த்தைகளே சிலருக்கு எதிராக நிற்கலாம். உனக்கு வாயில் சனி என்று சொல்வார்கள். அஷ்டம சனி காலத்திலும் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அண்ணாமலை பேசிய வார்த்தைகளே அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு காரணமாகி விட்டது. அதே போல நடிகர் விஜய் பேசிய தேவையற்ற வசனமே அவருக்கு எதிராக நிற்கிறது.
ஏழரை சனியை விட அஷ்டமத்து சனி நிறைய கஷ்டங்களைத் தரும். கோச்சார ரீதியாக சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதுதான் அஷ்டமத்து சனி. கடக ராசிக்காரர்களுக்கு தற்போது எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறது சனி பகவான். எனவே கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலம். இதில் பிரபலங்களும் தப்பவில்லை.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ராசி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம். சிம்ம லக்னம். அவர் கடந்த ஓராண்டு காலமாகவே பேசும் வார்த்தைகளை கவனித்தாலே தெரியும். கூட்டணி கட்சியினரை பற்றி மட்டுமல்லாது ஆளும் கட்சியை பற்றி பேசியும் வழக்கு விவகாரங்களில் சிக்கியுள்ளார். அண்ணாமலை பேசும் வார்த்தைகள் எல்லாமே ஏதாவது ஒரு பிரச்சினையில்தான் முடிகிறது.
அதே போல நடிகர் விஜய் கடக ராசி பூசம் நட்சத்திரம். லியோ படம் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினைதான். லியோ படத்தில் நான் ரெடிதான் வரவா பாடல் வரிகளால் பிரச்சினை உருவானது. இப்போது அவரது படத்தின் ட்ரெயிலரில் பேசியுள்ள ஒற்றை வார்த்தை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ரசிகர்களுக்கு விருந்து படைத்த விஜய் அந்த வார்த்தையை தவிர்த்திருக்கலாம் என்று ரசிகர்களே கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் அஜித் ராசி கடக ராசி பூசம் நட்சத்திரம் அவருக்கும் அஷ்டம சனிதான் நடக்கிறது. அவரது அடுத்த படத்தின் சூட்டிங் தடையாகி வருவதற்கு அஷ்டம சனிதான் என்கின்றனர் ஜோதிடர்கள். இந்த தடையும் பிரச்சினையும் எப்போது சரியாகும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.
மூன்று கடகராசியினர் - அஷ்டம சனி
1. அண்ணாமலை ஐபிஎஸ் ஆயில்யம், அஜித் - பூசம், விஜய் - பூசம் மூவருக்கும் அஷ்டம சனி நடந்தாலும், எந்த கிரகத்தால் பிரச்சனை என்பது புரியும். கோச்சார கேது மற்றும் கோச்சார சனியை ஜாதகத்தில் வைத்து பார்த்தால் தெரியும்.
அண்ணாமலை அவர்கள் ஜாதகத்தில் சனி மீது கோச்சார கேது, இது அவருக்கான பணி இயக்கத்தை தடை செய்வதை குறிக்கும். (கோச்சார கேது + ஜாதக சனி). கேதுவின் பெயர்ச்சிக்கு பின் அனைத்தும் சரியாகும்.
விஜய் ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் கோச்சார கேதுவால் பல சிக்கல்கள். (கோச்சார கேது + ஜாதக சனி). கேதுவின் பெயர்ச்சிக்கு பின் அனைத்தும் சரியாகும்.
அஜித் அவர்கள் ஜாதகத்தில் வக்ர சனி காலமான ஜூன் மாதம் முதல் கோச்சார சனி ஜாதக உச்ச செவ்வாய் நோக்கி நகர்கிறது. (கோச்சார சனி + ஜாதக உச்ச செவ்வாய்). சனி வக்ர நிவர்த்தியான நவம்பர் 4 பின் தடை அனைத்தும் சரியாகும் என்று பதிவிட்டுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications