சனி வக்ர நிவர்த்தி 2025: மேஷ ராசி எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. ஆட்டத்தை மாற்றும் சனி பகவான்
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மேஷ ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் மேஷம் ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்கு சனி பகவான் 10 மற்றும் 11 ஆம் இடங்களுக்கு உரியவர். அதாவது தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு உரியவர். அந்த சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் வக்ர கதியில் இருந்து, நிவர்த்தி அடைய போகிறார். கடந்த 4 மாதங்களாக உத்யோகம், தொழிலில் ஏராளமான பிரச்சனைகள், அழுத்தங்கள், அலைச்சல்கள் இருந்திருக்கும். சிலருக்கு வேலை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
உத்யோகம்
சனி பகவான் தன் இயல்பை மீறி செயலாற்றியதால் கோபம் அதிகளவு வந்திருக்கும். தற்போது அந்த நிலை முற்றிலும் மாறப் போகிறது. உத்யோகம் இல்லாதவர்களுக்கு அல்லது நல்ல உத்யோகம் வேண்டும் என்று முயற்சியில் இருப்போருக்கு நவம்பர் 28 ஆம் தேதிக்கு பிறகு நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் கடந்த காலங்களில் தடைபட்ட பலன்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
தொழில்
தொழிலில் மாற்றங்கள் நிகழும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். உங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளிநாடு, வெளிமாநில யோகம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதியில் நிறைய லாபம் கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் நிறைய பலன்கள் கிடைக்கும். சுப காரிய தடைகள் விலகும். சுப விரய செலவுகள் உண்டு.
லாபம்
முதலீடுகளில் லாபம் நன்றாக இருக்கும். சொந்த வீடு கனவு நனவாகும். நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகள் வாங்குவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைக்கும். எதிரிகள் அமைதியாவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகி மகிழ்ச்சி அதிகரிக்கும். விரய சனி நடப்பதால் வீண் விரயம் இருக்கும். அதை சுப முதலீடாக பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications