Sani Vakra Nivarthi: சனியின் பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷப ராசி.. எதை தொட்டாலும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம் 12 ஆம் தேதியான நேற்று வெள்ளிக்கிழமை மீன ராசியில் இருந்து மீன ராசியிலேயே வக்ரம் நிவர்த்தி அடைந்துள்ளார். 330 டிகிரியில் மீன ராசியில் குருவின் நட்சத்திரத்தில் சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிவர்த்தியில் இருந்து நிவர்த்தி அடைந்துள்ளார்.

sani-vakra-nivarthi-rishabam-what-kind-of-benefits-rishabam-rasi-people-will-get-during-this-period

தொழில் காரகன், தொழிலுக்கு அதிபதி, கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நவக்கிரகத்திலேயே நேர்மையான பகவான் சனி. இந்த வக்ர நிவர்த்தி காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான மாற்றங்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியாதிபதி சுக்கிரன் திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியவர். வண்டி, வாகனம், மனைவி, பெண்ணுக்கு அதிபதியானவர் சுக்கிரன். பெண்களாக இருக்கும் ரிஷப ராசியினர் சனி வக்ர நிவர்த்திக்குப் பின்னர் அருமையாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். சனியுடைய பார்வை 3, 7, 10. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு. ராகு, கேதுவுக்கு 3, 7, 11.

சனி பார்வை

மீன ராசியில் இருந்து உங்கள் ராசியை சனி பகவான் பார்க்கிறார். ரிஷப ராசியை 3 ஆம் இடமாகப் பார்ப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதியில் இருந்து ஜூலை 13 வரைக்கும் நன்றாக வேலை செய்திருக்கும். அன்று முதல் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை நன்றாக இருந்திருக்காது. சனி பகவான் முன்னோக்கி வரும்போது உங்கள் ராசியைப் பார்த்து நன்மையை செய்வார்.

வெற்றி

எடுத்த காரியங்களில் இனி வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இனி சனி முன்னோக்கி வருவதால் நன்மைகளைப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ரிஷப ராசியினர் மண் மீது முதலீடுகளை செய்யும் யோகம் உண்டாகும். மார்பு சார்ந்த பிரச்சனைகள் இனி தீரும் காலகட்டமாக இருக்கும். தெய்வ காரியங்களுக்கு தொண்டு செய்வீர்கள்.

மண், மனை யோகம்

உங்களுக்கு இப்போது லாப சனி வருவதால் மண், மனை வாங்கும் யோகம் உண்டாகும். இடம் வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். படிப்பு சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். சனி பகவான் பார்வை உங்கள் மேல் படுவதால் அற்புதமான மாற்றம் உண்டாகும்.

அனுகூலம்

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சொந்த தொழில் தொடங்கும் பிராப்தம் உண்டாகும். மண், மனை, பொருள் என எதைத் தொட்டாலும் உங்களுக்கு யோகம் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். கணவன், மனைவிக்குள் புரிதல் ஏற்படும். கடன்கள் தீரும். துன்பங்கள் விலகும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். சாதிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+