சனி வக்ர பெயர்ச்சி: மிதுன ராசியை தேடி வரும் அரசு வேலை.. பண மழை கொட்டும்.. ஆரோக்கியத்தில் கவனம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். தேவையில்லாமல் பணத்தை இழந்துவிடக் கூடாது. சுக்கிரன் மீது சனியின் வக்ர பார்வை இருப்பதால் பெண் மூலமான அவதி ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். கண், பல், தலை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். மருத்துவமனையில் அனுமதியாவது போன்றவை உண்டாகும்.
பொருள்களில் கவனம்
வண்டி, வாகனங்களில் விபத்துகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வண்டியில் சேதமாகி அதனை பழுது செய்வீர்கள். விலையுயர்ந்த பொருட்கள் களவு போவதற்கான வாய்ப்புள்ளது. லட்சுமி என்ற பெயரால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடத்தில் அடுத்த 45 நாட்களுக்கு செவ்வாய் பகவான் வரப்போகிறார். தூக்கமின்மை வருவதற்கான வாய்ப்புள்ளது, கண்ணாடி, பர்ஸ் போன்றவை காணாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. பேருந்தில் பொருள்களை தொலைக்கும் சூழ்நிலை உருவாகும்.
குடும்ப பிரச்சனை
4 ஆம் இடத்தில் செவ்வாய் வருவதால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். வீடு கட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிரச்சனை உண்டாகும். நிறைய பேருக்கு ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆஞ்சியோ செய்யும் நிலை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சொத்துகள் சேரும்
இண்டஸ்டிரியல் தொழிலில் பாதிப்பு ஏற்படும். பள்ளி, கல்லூரி, அரசு வங்கிகள், உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதிப்புகள் வரும். தாயின் உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. தொழில், வேலை ஆரம்பிப்பவர்களுக்கு ஜாதகத்தில் சனி வக்கிரத்தில் இருந்தால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிலம் வாங்குவது, உற்பத்தி செய்வது, வீடு கட்டுவது, புதிய தொழில் நிறுவனம் ஆரம்பிப்பது, தாய் வழி சொத்து வந்து சேரும், மிகப்பெரிய வெற்றி, மனமகிழ்ச்சி, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
அரசு வேலை
குழந்தைகளை ஒழுக்கம் என்று கூறி மிகுந்த அவதிப்படுத்துவீர்கள். குழந்தைகளை தன்மையாக கையாளுவது நல்லது. ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் மத்திய அரசு வேலை கிடைக்கும். யுபிஎஸ்சி போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க உத்தியோகம், அரசு ஒப்பந்தம் கிடைக்கும். கல், மணல், கட்டுமானம், ஜல்லி சம்பந்தப்பட்ட வியாபாரங்கள், உற்பத்தியாளர்கள், குவாரி வைத்திருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும்.
பணவரவு
மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமான காலகட்டமாக இருக்கும். முருகன் பெயர் கொண்ட மருத்துவர்களால் பிரச்சனைகள் சரியாகும். மார்பு, இதயம் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. உங்கள் எல்லைக்குள் இருக்கும் முருகப்பெருமானை வழிபடுவது, அபிஷேகத்துக்கு கொடுப்பது அற்புதமான மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.


Click it and Unblock the Notifications
