சனி வக்ர பெயர்ச்சி பலன்: சிம்ம ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. திடீர் மாற்றம் நிச்சயம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம் ராசி பலன்
சனி உங்களுக்கு அஷ்டமத்தில் வக்கிரமடைகிறார். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வரப்போகிறார். சரியான வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
தடைபட்ட பலன்கள்
உத்யோகம், தொழிலில் தடைபட்ட யோக பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, பழைய பாக்கி வந்து சேரும். தொழிலில் லாபம் சீராக இருக்கும். பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட கல்விகளில் வெற்றி கிடைக்கும். கட்டுமானம், ஹார்டுவேர் துறைகளில் இருப்போர் ஏற்றம் காண்பார்கள். குடும்பத்தில் முருகர் பெயர் கொண்ட நபர்களால் நல்லது நடக்கும்.
கவனம்
உத்யோகம், தொழிலில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்யோகம், தொழிலில் இரண்டிலும் யாரையும் நம்பி இறங்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால் பகுதியில் அடிபட வாய்ப்புள்ளது. உங்கள் மாமியாரின் ஆரோக்கியத்திலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
குடும்பம்
ஆண் குழந்தைகள் இருப்போர் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவர்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். குடும்பத்தில் வீண் விவாதங்கள், மோதல் போக்கை தவிர்த்து பிரச்னைகளை பொறுமையாக பேசி தீர்க்க வேண்டும்.
ஆரோக்கியம்
வீடு, வாகனங்களில் பழுது ஏற்படும். வாகனம், மின்சாதனங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வாழ்க்கை துணை ஆரோக்கியத்திலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவது நல்லது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
வழிபாடு
பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கை வேண்டும். யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். திரும்பி வாங்க முடியாத அபாயம் உள்ளது. வீண் விரயமும் ஏற்படும். எல்லாவற்றிலும் நிதானம், பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ராஜ அலங்காரத்தில் உள்ள முருக பெருமானை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications