சனி வக்ர பெயர்ச்சி: கன்னி ராசிக்கு முக்கிய மாற்றத்தை தரும் சனி.. 138 நாட்களுக்கு கொட்டும் யோகம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி
அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.
அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இதுவரைக்கும் சனி பகவான் 7 ஆம் இடத்தில் கண்டகச் சனியாக இருந்தார். தற்போது 6 ஆம் இடத்திற்கு வரப்போவதால் வரும் 138 நாட்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் எந்த காரியங்களை நினைத்தாலும், தொட்டாலும் லாபம், வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். உங்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
வெற்றி
6 ஆம் இடத்தில் சனி இருப்பதை யோகத்தைக் கொடுக்கும். நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். 3 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் முயற்சிகளை அதிகம் போட வேண்டியதிருக்கும். உழைப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தால் பெரிய வெற்றிகளை அடையும் யோகம் உண்டாகும். 8 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவுகளில் இணக்கம் ஏற்படும்.
வேகம்
தலைபாரம், தலைவலி, தலையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் அதிக வேலை, அதிக பளு இருந்து கொண்டே இருக்கும். தொழில் ரீதியாக நிறைய ரிஸ்குகளை எடுக்க வேண்டியதிருக்கும். விற்பது, வாங்குவது, கொடுப்பது, கடனை கட்டுவது என வேகமெடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஒருமுறைக்கு இருமுறை முயற்சி போட வேண்டியதிருந்தாலும் இறுதியில் அதில் வெற்று பெற்று சாதிக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உண்டாகும். 138 நாட்களில் உழைப்பிற்கான பலனைப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications