Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் மாயமாகும்

விகாரி தமிழ் வருடம் முடியப்போகிறது சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிய தமிழ் புத்தாண்டில் நமக்கு நல்லது நடக்குமா? வேலை கிடைக்குமா இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? வருமானம் வரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை தரக்கூடிய ஆண்டாகவும் அதிர்ஷ்டங்களை தரக்கூடிய ஆண்டாகவும் அமையப்போகிறது.

ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.

நிகழும் மங்கலகரமான சார்வரி புது வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை 13.04.2020 இரவு மணி 7.20க்கு கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது. புத்தாண்டு தொடங்கும் போது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சந்திரன், கேது, நான்காம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், ஆறாம் வீட்டில் புதன் ஏழாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். ஒன்பதாம் வீட்டில் ராகு என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

சந்தோஷம் தரும் ஆண்டு

சந்தோஷம் தரும் ஆண்டு

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு சார்வரி புத்தாண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக உள்ளது. காரணம் சார்வரி புது வருடம் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. உங்க ராசிக்கு யோகக்காரகனாக உள்ள சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இது அர்த்தாஷ்டம சனி என்றாலும் அச்சப்பட வேண்டாம். கெடுதல்கள் செய்யமாட்டார் சனிபகவான். நன்மைகளை மட்டுமே செய்வார் என்றாலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

நல்ல வேலை கிடைக்கும்

நல்ல வேலை கிடைக்கும்

சனிபகவான் சில மாதங்கள் பின்னோக்கி வக்ரமடைந்து தனுசு ராசிக்கு செல்கிறார் மீண்டும் மார்கழி மாதத்தில் நேர்கதியில் மகரம் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமர்வார். புதிய பதவிகள் தேடி வரும் சம்பள உயர்வு கிடைக்கும், துலாம் ராசிக்கு சனிபகவான் நன்மைகளை செய்வார். காரணம் சனிபகவான் உங்க ராசியில் உச்சமடைகிறார். இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பின்னர் உங்க குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும். சிலர் வெளியூர் செல்ல வாய்ப்பு வருகிறது. அரசு வேலைக்கு எதிர்பார்த்தாலும் தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் பேசும் போது கவனமாக இருங்க. தகவல் தொடர்பு, சாப்ட்வேர் முறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.

குரு தரும் யோகம்

குரு தரும் யோகம்

குரு அதிசாரமாக நான்காம் வீட்டில் இருக்கிறார். பின்னர் வக்ரமடைந்து மீண்டும் மூன்றாம் வீட்டிற்கு வருகிறார். நேர்கதியில் மீண்டும் மகரம் ராசிக்கு நவம்பர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகிறார். சார்வரி ஆண்டு பங்குனி மாதம் இறுதியில் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்கிறார். குருவின் சஞ்சாரம் 3,4,5ஆம் வீடுகளில் அற்புதமாக அமைந்துள்ளது. செவ்வாய், சனி குரு சேர்க்கையால் வீடு யோகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கலாம்.

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

ராகு கேது பெயர்ச்சி செப்டம்பரில் நிகழ்கிறது. ராகு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கும், கேது பகவான் மூன்றாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். எதற்கும் பயப்படாதீங்க. சின்னச் சின்ன விபத்துக்கள் ஏற்படும் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கணும். வண்டி வாகனங்களில் போகும் போதும் நிதானமாக போங்க. அப்பாவின் உடல்ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. உங்க உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. உடற்பயிற்சி செய்யுங்க. கொழுப்பு, வாய்வு பிரச்சினைகளை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடாதீங்க.

ஆரோக்கியம் அற்புதம்

ஆரோக்கியம் அற்புதம்

மாணவர்கள் படிப்பில அக்கறை செலுத்துங்க. மாணவர்களுக்கு நல்லதொரு ஆண்டாக உள்ளது. கனவுகள் நனவாகும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வருகிறது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு அருளால் நீங்கஅதிக கடன் வாங்காதீங்க. கவனமாக இருங்க. பெண்கள் குடும்ப வாழ்க்கையில் கசப்பான உணர்வுகளை சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் கசப்பு உணர்வுகள் சில மாதங்களில் நீங்கும்.

பணவரவு

பணவரவு

இது வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் வரும். வியாபாரிகளுக்கு ரொம்ப நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. பணவரவு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தம் நீங்கும்

பெண்கள் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் கொடுங்கள். சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் பதிவிட வேண்டாம் அதுவே உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்து விடும். தியானம் செய்யுங்க. மன அழுத்தம் போகும். நல்ல வருமானம் வரும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். காஞ்சி காமாட்சி அம்மனை கும்பிடுங்க. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கவும் தடைகள் விலகவும் தன்வந்திரி பகவானை வணங்குங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+