எல்லாம் ஓகே.. அந்த ஒரு விஷயம்.. 4 கிரகங்கள் சேர்க்கை கும்பம் ராசிக்கு எப்படி?
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது கும்பம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
கும்பம் ராசிக்கு உங்களின் இரண்டாம் இடமான குடும்ப, தன மற்றும் வாக்கு ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியினர் மிகுந்த துணிச்சல் மிக்கவர்களாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை தைரியமாக இறங்கி சாதிப்பீர்கள்.
சமீப காலமாக கும்ப ராசியினர் சந்தித்த துன்பங்கள் ஏராளம். திரும்பிய பக்கமெல்லாம் பிரச்னைகளால் நொந்து போயிருப்பீர்கள். ஏராளமான இழப்புகளை சந்தித்திருப்பீர்கள். வாழ்க்கையில் நினைத்தபடி எதுவும் நடப்பதில்லை என்று நினைத்து வேதனைப்பட்டிருப்பீர்கள். உங்களின் துன்பங்கள் எல்லாம் இன்பமாக மாறவுள்ளது. இந்த நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை உங்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமாக இருக்கும்.
தொழில் ரீதியான நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் சிறப்பான லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகி, பணவரவு திருப்திகரமாக இருக்கும். வருவாய் நன்றாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த பிரச்னைகள் முழுமையாக விலகும். பணியிடத்தில் தைரியத்துடன் செய்யும் பணிளால் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
புதிய வேலை வாய்ப்பிலும் நல்ல முடிவுகள் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளுக்காக தேர்வு எழுதியவர்களுக்கு சாதகமான முடிவுகள் வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம் இருக்கும். உத்யோகம், தொழிலில் வெளிநாடு பயணத்தால் யோகம் உண்டு. இதுநாள் வரை திருமண தடைகள் இருந்தவர்களுக்கு அது விலகி, திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மறுமணம் சார்ந்த விஷயத்திலும் முயற்சிகள் கைக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சூரியன் - சுக்கிரன் கிரகங்கள் இணைந்துள்ளன. இதனால் சட்ட ரீதியான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் கணவன் - மனைவி உறவில் மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.
காதல் உறவில் இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. நிலம், வீடு, நகை, வண்டி, வாகனம் என்று சொத்து சேர்த்துவதற்கான அமைப்பு உள்ளது. கல்வியிலும் சிறந்த முன்னேற்றம் இருக்கும். சுபசெலவுகள் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். இரண்டாவது இடத்தில் ராகு பகவான் இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தோல், எலும்பு, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications