"இந்த ரோடு என்ன விலை".. 4 கிரகங்கள் சேர்க்கையால் மிதுனம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது மிதுனம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
மிதுனம் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. எல்லாவற்றையும் கவனமாக கையாளும் நீங்கள், கடந்த காலங்களில் பலவிதமான பிரச்னைகளால் மிகுந்த மனவேதனை அடைந்திருப்பீர்கள். எவ்வளவு நிதானமாக, திட்டமிட்டு செய்த காரியங்களிலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்திருக்காது.
உங்களின் நண்பர்கள் கூட எதிரிகளாக மாறியிருப்பார்கள். குடும்ப உறவுகளிலும் மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கும். பணிச்சுமை, மற்றும் பிரச்னைகளால் தூக்கமின்மை ஏற்பட்டிருக்கும். கடன் சுமை உங்கள் நிம்மதியை கெடுத்திருக்கும். உங்கள் ராசி அதிபதி புதன் மீனத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இது அற்புதமான பலன்களை தரவுள்ளது.
வருமான அதிகளவு பெருகவுள்ளது. தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சமாக இருப்பதுடன், சூரியன், புதன், ராகு சேர்க்கையால் தடைகளை தகர்த்தெறிவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி, உங்களின் முயற்சிகள் படிப்படியாக நிறைவேறும். தொட்டது துலங்கி எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் நீட்சமாக இருப்பதால் நீட்ச பங்க ராஜயோகம் ஏற்படவுள்ளது.
உங்களின் நிர்வாகத்திறமை மற்றும் புத்திசாலித்தனத்தால் எதிலும் வெற்றி, லாபம் பெறுவீர்கள். பணியிட மாற்றம், வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசுப் பணிகளில் இருப்போருக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம் கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் உறவில் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே விவகாரத்து ஆனவர்களுக்கு மறுமணம் ஆவதற்கும் வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுக நிகழ்வுகள் நடைபெறும்.
கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் நல்ல ஆதாயம் உள்ளது. நிலம், வீடு, வண்டி, வாகனம் ஆகிய சொத்துகள் சேர்வதற்கான வாய்ப்புள்ளது. தடைபட்ட வீட்டு வேலைகள் மீண்டும் தொடங்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications