மகர ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. 4 கிரகங்களின் சேர்க்கையால் பணம், அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்களின் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீன ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது மகர ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீச்சமாக உள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள். மகர ராசி அன்பர்களுக்கு சதுர் கிரக யோகத்தால் உண்டாகும் யோகங்கள் குறித்து பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்கள் சனி பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். மனோக்காரகன் என்று அழைக்கப்படுபவர்கள். எல்லா விஷயத்தையும் தைரியத்தோடு செய்யக்கூடிய நபர்களாக இருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியால் சாதித்துக் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். நிறைய இழப்புகளைச் சந்தித்தவர்களாக இருப்பார்கள்.
சரியான நண்பர்கள், உறவினர்கள் இல்லை. பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். இழப்பதற்கு என எதுவும் இல்லை என்று கவலைப்பட்டிருப்பீர்கள். கடின உழைப்புக்கு பெயர்பெற்றவர்களாக இருப்பீர்கள். வாங்கும் சம்பளத்தை செலவு செய்யக்கூடிய காலகட்டமாக இருந்திருக்கும். திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் என அனைத்து விஷயங்களிலும் தோல்வியை சந்தித்திருப்பீர்கள்.
தற்போது உங்கள் ராசியின் மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதன் மூலம் கேட்கக்கூடிய இடங்களில் எல்லாம் உங்களுக்கு உதவி கிடைக்கும். சில கிரகங்களின் சேர்க்கை சனி ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய மகர ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக இந்த மார்ச் மாத காலகட்டத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகிச் செல்லும்.
தொழில் ரீதியான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நிச்சயமாக நல்ல மாற்றமாக இருக்கும். புதிய தொழில்கள், புதிய முயற்சிகளைத் தொடங்கி வெற்றிகளைக் காண்பீர்கள். தொழிலில் நல்ல லாபம், வளர்ச்சியைக் காண்பீர்கள். தைரியமான சில முயற்சிகள் எடுப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் வந்து சேரும். பணம் ரீதியான பிரச்சனைகள் தீரும்.
புதிய வேலைகள் தேடுவோருக்கு நல்ல அலுவலகத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் இருந்து நல்ல வேலைக்குச் செல்வீர்கள். சம்பள உயர்வுடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான காலமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
திருமண வரன் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதற்கான யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பெறுவதற்கான யோகம் உண்டு. மருத்துவ ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொந்த பந்தங்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் சரியகும்.
புதிய வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான யோகங்கள் உண்டு. புதிய வீடுகள் கட்டுவதற்கான முயற்சிகள் வாய்ப்புகள் நல்ல பலனைத் தரும். நிலங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு, பூர்வீக சொத்துகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இடம் மாறக்கூடிய யோகம் உண்டு. சொத்துகளை விற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல யோகமான காலமாக இருக்கும். சொத்துகள் வாங்குவதற்கும் சிறப்பான நேரமாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் வெற்றியைத் தரும்.
கல்வியில் நல்ல முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாறுவது. இடமாற்றம் செய்வதற்கான யோகம் உண்டு. இது உங்களுக்கு ஒரு யோக காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications