உத்யோகத்தில் உச்சம் தொடும் யோகம்.. மகரம் ராசிக்கு அள்ளி தரும் கிரக பெயர்ச்சிகள்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது மகரம் ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். வருகிற மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது மகரம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
மகரம்: அடுத்தடுத்து கிரக பெயர்ச்சிகளால் மகர ராசிக்கு கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் விலகி நல்ல காலம் பிறக்க போகிறது. சனி மூன்றாம் இடத்துக்கு செல்வது நல்ல பலன்களை கொடுக்கும். குரு பகவான் ஆறாம் இடத்துக்கும், ராகு கேது 2 மற்றும் 8 ஆம் இடங்களுக்கும் பெயர்ச்சி ஆகின்றன.
உத்யோகம்
குருவின் பார்வை பலமான இடங்களில் விழுகின்றன. வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவோருக்கு இந்த காலத்தில் உங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்போருக்கு உத்யோகத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பதற்கான சூழல் வாய்ப்புகள் அமையும், பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகளால் உச்சம் தொடுவார்கள்.
பொருளாதாரம்
எதிர்பார்த்த பணியிட மாற்றம் நிகழும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி சீரான லாபத்தில் செல்லும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கடன் சுமை குறையும். நீண்ட காலமாக திட்டமிட்ட புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சரியான காலம். ஆனால் அகல கால் வைக்காமல் தெளிவான திட்டமிடல்களுடன் இறங்க வேண்டும்.
சுப விரயம்
சுப விரயங்கள் நடக்கும். திருமண தடைகள் நிவர்த்தியாகி இந்த காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணி, வீடு போன்றவற்றில் ஆரோக்கியமான இடமாற்றம் நிகழும். விற்க முடியாத சொத்துகளை இந்த காலத்தில் விற்பீர்கள்.
பயணம்
சட்ட சிக்கல்கள் விலகி உங்களுக்கு சாதகமான அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்கள் இந்த காலத்தில் நிறைவேறும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்களால் நன்மை பிறக்கும்.
உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த நேரத்தில் வங்கியில் இருந்து கடன் கிடைக்கும். நீண்ட காலமாக மனதில் உள்ள சொந்த வீடு கனவு நனவாகும். எதிர்பாராத நேரத்தில் திடீர் பண வரவு கிடைக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே வாழ்க்கை துணை விவகாரத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குரு மற்றும் கேதுவால் ஆரோக்கியத்தில் அவ்வபோது பிரச்னைகள் வந்து நீங்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications