சனிப்பெயர்ச்சி 2025: சொத்துகளை குவிக்கும் தனுசு ராசி.. உறவினர்களிடம், வேலையில் எச்சரிக்கையா இருங்க
சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், தனுசு ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் 4 ஆம் இடத்துக்குப் போகிறார். ராகு பகவான் 3 ஆம் இடத்துக்கு வருகிறார். இந்த காலகட்டத்தில் சொத்து விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அண்ணன், தம்பி, சொத்து விவகாரம், சொத்தை விற்று செட்டில்மென்ட் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மூன்றாவது மனிதர்களால் சொத்து பிரிப்பதில் பிரச்சனை ஏற்படும். உறவுகள், நண்பர்களிடத்தில் பிரிவினை, பகை வருவதற்கு அர்த்தாஷ்டம சனி வருவதற்கு வாய்ப்புள்ளது.
7 ஆம் இடத்தில் குரு பகவான் வருவதால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும். சொத்து சண்டை இல்லை என்று கூறுபவர்களுக்கு சம்மந்திகளுக்குள் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவான் வருவதால் பித்ருக்களினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் வரும். ஏற்கனவே பித்ரு சாபம் உள்ளது, குலதெய்வ வழிபாடு இல்லை என்றால் உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்படும்.
4 ஆம் இடத்தில் இருக்கும் குரு 7 ஆம் இடத்துக்கு வருகிறார். 4 இல் சனி வரும்போது உறவினர்கள், சொந்த பந்தங்களால் அவமானங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் செய்யாத தவறுக்கு தண்டனைகள் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள், நீண்டகால நண்பர்களாக இருந்து காதலிப்பவர்களுக்கு தேவையில்லாத லீகல் பிரச்சனைகள் வரும்.
குரு பார்வை நன்றாக இருந்தாலும் கூட சனி பகவான் உறவுகளுக்குள் கஷ்டத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த ஜாதகத்தில் தசா காலங்களைப் பொருத்து அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டுவது நல்லது. வேலை இடத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நட்பு பாராட்டும் நபர்களாலேயே பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகம் நன்றாக இருக்கும். இடமாற்றங்கள் உண்டாகும். உயர் பதவிகள் வந்து சேரும்.
வியாபாரம், கூட்டுத்தொழில், சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல கடனுதவி கிடைத்து வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நல்ல காலமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் மனக் கசப்புகள், பிரச்சனைகள் ஏற்படும். கூடுமானவரை விவாதங்கள், பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. பேசியே ஆக வேண்டிய சூழ்நிலையில் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மூலம் நட்சத்திரக்கார பெண்களுக்கு கோபம் உண்டாகும். பெற்றோர் வீடுகளில் பகை வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், மன உளைச்சல், மன பாதிப்பு ஏற்படும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
ஒருமுறைக்கு பலமுறை யோசித்து, சிந்தித்து ஒவ்வொரு விஷயங்களிலும் ஈடுபடுவது நல்லது. மன ரீதியான அழுத்தங்களைச் சந்திப்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அழுத்தம் உண்டாகும். யோகா, பாடல்கள் கேட்பது நல்லது. மூலம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு உளுந்து தானம் செய்வது, நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.
பூராடம் நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் ஈஸ்வரனுக்கு வில்வ அர்ச்சனை செய்யலாம். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் மதுரை சென்று சொக்கநாதரையும், மீனாட்சியையும் தரிசனம் செய்வது நல்ல பலன்களைத் தரும். தனுசு ராசிக்காரர்களுக்கு தை மாதம், ஆடி மாதம், மகாளய அமாவாசை காலங்களில் கடலோர ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவது சனி ராகு கேதுவால் ஏற்படும் அந்த கெட்ட பலன்களில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெரியாத நபர்கள், சோஷியல் மீடியா மூலம் வரும் நண்பர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதனால், கெட்ட பெயர் உண்டாவதற்கான வாய்ப்புண்டு. திருமண யோகம், குழந்தைப் பேறு, வண்டி, வாகனம் யோகம், வசதிகள், சொத்து வாங்கும் யோகம் உண்டு. நல்ல ஒரு உயர்வான காலமாக இருக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications