குரு பார்வை, புதன் உச்சம், சுக்கிரன் ஆட்சி.. கும்ப ராசிக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்ட மழை
செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

துலாம், கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். துலாம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு மாதத்தின் ஆரம்பத்திலேயே 15 நாட்களுக்கு சூரியன் ராசியோடு தொடர்பு கொள்கிறார். 7 ஆம் அதிபதி 7 ஆம் இடத்தில் இருக்கிறார். நண்பர்கள் மூலமாக, கணவன், மனைவி, காதலன், காதலி மூலமாக நன்மைகள் நடக்கும். செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு 8 ஆம் அதிபதி புதன் உச்சமாவதால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
லாபம்
பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டேன் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இழந்த பணங்கள் மீண்டும் திரும்பி வரும். தொழில், வியாபாரத்தில் போட்ட பணம், மற்றவர்களிடம் கொடுத்த பணம் என இதுவரை இழந்த பணங்கள் எல்லாம் மீண்டும் கிடைக்கும். பண பாதிப்புகள், மன பாதிப்புகள் நீங்கும்.
வழிபாடு
நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். திவ்ய தரிசனங்கள் ஏற்படும். 108 திவ்ய தேசங்களுக்கு சென்று வரும் அமைப்புகள் ஏற்படும். சிவ தரிசனம், பெருமாள் தரிசனம், ஸ்ரீமகா பெரியவர், ஸ்ரீ ரமணர் போன்ற மகான்களின் தரிசனம் ஏற்படும். எல்லா விஷயத்திலும் நன்மைகள் அதிகமாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும்.
திருமண யோகம்
நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு திருமண உறுதி, திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். எல்லா முடிவுகளையும் தெளிவாக எடுப்பீர்கள். கும்ப ராசிகளுக்கு பொதுவாக எல்லா விஷயங்களும் நிதானமாகவே நடக்கும். ஆனால், இந்த மாதம் எல்லா விஷயங்களும் வேகமாக நடைபெறக்கூடிய மாதமாக இருக்கும்.
பாக்கியம் கொட்டும்
நிறைய பாக்கியங்கள் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும், திருமண பாக்கியம், வேலை பாக்கியம், கல்வி பாக்கியம், ஆரோக்கிய பாக்கியம், படிப்பு பாக்கியம் என வயதிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் பாக்கியங்கள் உண்டாகும். தொழில் செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும். வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஏழரைச் சனி முழுமையாக முடிவதால் வெற்றிநடை போடக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
குரு பார்வை
தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதன் உச்சம், சுக்கிரன் ஆட்சி, ராசிநாதனுக்கு குரு பார்வை என அற்புதமான கிரக அமைப்புள்ளதால் ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழில் துறையில் வியாபாரிகளுக்கு இருந்து வந்த தயக்கங்கள் விலகும். சிலருக்கு கடன் ஏற்பட்டாலும், அவை வளர்ச்சிக்கான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும்.


Click it and Unblock the Notifications
