செப்டம்பர் மாத ராசிபலன் 2019: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு பலன்கள் - பரிகாரங்கள்
செப்டம்பர் மாதம் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் பலன்கள் எப்படி, பரிகரங்களைப் பார்க்கலாம்.
Recommended Video
சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்தில் பாதி நாட்களும் கன்னி மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், என நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பலன்கள் எப்படி என்றும் என்ன பரிகாரம் என்றும் பார்க்கலாம்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களையே தரும்.
மாத முற்பகுதியில் சிம்மத்தில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் மாத இறுதியில் கன்னி ராசியில் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றங்களினால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் என்னென்ன நடக்கும் பண வருமானம், கல்வி, வேலை வாய்ப்பு திருமண முயற்சி எப்படி என்று பார்க்கலாம்.

எட்டில் கிரகங்கள் கூட்டணி
மகரம் ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி சேருவது சுமாரான பலன்களையே தரும். எட்டாவது வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆறாம் வீட்டில் ராகு 11ஆம் வீட்டில் குரு 12ல் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் செலவு அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனமா இருங்க. கோபத்தோடு எந்த முடிவும் எடுக்காதீங்க. பொறுமையோடு இருங்க.

அதிகாரிகளுடன் மோதல்
கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வரலாம் எனவே ஜாக்கிரதையாக இருங்க வாக்குவாதம் வேண்டாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து செய்யுங்கள். மனதை சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நிதானம் பொறுமை தேவை. வாக்குவாதங்களை விட்டு விடுங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினையை விட்டு விலகி விடுவது உத்தமம். எட்டில் சூரியன் உயரதிகாரிகளுடன் மோதல் வரும். பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட தவிர்த்து விடுவது நல்லது.

மாத பிற்பகுதியில் நன்மை
மாத முற்பகுதியில் கவனம் தேவை. மகரம் இந்த மாதம் வேலையிலும் பாதிப்பு வரும். விட்டு கொடுங்கள் வருத்தப்பட வேண்டாம். கெட்ட நேரம் சுத்தி அடிக்கிறப்ப எதையும் கவனமாக கையாளுங்கள். கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுக்காதீங்க. வண்டியில் செல்லும் போது கவனமாக இருங்க. வேகத்தை அதிகப்படுத்தாதீங்க. பொறுமையும் நிதானமும் இருந்தால் மாத முற்பகுதியை கடக்கலாம். செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மேல் முயற்சி பண்ணுங்க. சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவார். 17ஆம் தேதிக்கு மேல் கிரகங்கள் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வது நன்மை.
அப்பா வழியில் லாபம் அதிகரிக்கும். சொத்துக்கள் சேரும், வருமானம் வரும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் பிரச்சினைகள் தீரும். கால பைரவர் வழிபாடு கவலைகளை மறக்கடிக்கும்.

மாத பிற்பகுதியில் கவனம்
கும்பம் ராசிக்காரர்களே செப்டம்பர் மாதம் முற்பகுதியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில்
கூட்டணி சேருகின்றன. சனி 11ஆம் வீடான லாப ஸ்தானத்திலும் குரு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் சேருகின்றனர். செய்யும் வேலையில் மாற்றம் வரும். தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம். வருமானம் கூடும்.

விழிப்புணர்வு அவசியம்
பத்தாம் தேதிக்கு மேல் கிரகங்கள் எட்டாம் வீட்டிற்கு நகர்கின்றனர். 17ஆம் தேதியில் இருந்து சூரியன் எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். 25ஆம் தேதி செவ்வாய் சூரியன்,சுக்கிரன், புதனோடு கூட்டணி சேருகிறார். கிரகங்கள் எட்டாம் வீட்டில் கூட்டணி சேருவதால் போராட்டங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் கவனமாக விழிப்புணர்வோடு செயல்பட்டால் பிரச்சினைகளை குறைக்கலாம். தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்க. முதலீடு செய்யும் முன் யோசனை தேவை. திருமண முயற்சிகள் இப்போதைக்கு தேவையில்லை. எதிர்மறையாக சிந்தனைகள் அதிகம் வரும். அதனை தவிர்க்க அனுமன் சாலீசா படியுங்கள்.

புது முயற்சிகள் வேண்டாம்
செப்டம்பர் மாதம் மீனம் ராசிக்கு ஆறாம் வீடான சிம்மத்தில் நான்கு கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளதால் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். பாக்ய குரு, தொழில் ஸ்தான சனி நன்மைகளை ஏற்படுத்தும். 10 ஆம் தேதியும் 11ஆம் தேதியும் சுக்கிரன், புதன் கிரகங்கள் ஏழாம் வீடான கன்னி ராசிக்கு நகர்கின்றன. இந்த மாதம் புது முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். பத்தாம் வீட்டில் இருக்கும் சனி கேதுவினால் தடங்கல்கள் வந்து செல்லும்.

ஏழாம் வீட்டில் கிரகங்கள்
மாத பிற்பகுதியில் ஏழாம் வீடான கன்னி ராசியில் கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. குடும்பத்தில் குதூகலம் இருந்தாலும் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும். மனதிற்கு பிடிக்காத வேலையை வேலையில் கடனே என்று வேலை செய்வீர்கள். 17ஆம் தேதி சூரியன் நகர்வது நன்மை நடக்கும். செப்டம்பர் மாதம் புது முயற்சிகள் வேண்டாம் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழுங்கள். பணத்தை அதிகமாக எதிலும் முதலீடு செய்து நஷ்டப்பட வேண்டாம். பாதிப்புகள் குறைய வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications