நீசபங்க ராஜயோகம் தரும் அதிர்ஷ்டம்!.. செப்டம்பரில் ஜாக்பாட் அடிக்கப் போகும் 4 ராசிகள்
செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் மற்றும் நீசபங்க ராஜயோகம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்ட பலன்களை அள்ளும் 4 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். குறிப்பாக, துலாம், சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். இந்த 4 ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு மிகப்பெரிய விடிவு காலம் பிறக்கக்கூடிய மாதமாக இந்த செப்டம்பர் மாதம் அமையும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு தடையையும், எதிர்மறையான விஷயங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். 2 ஆம் தேதியில் இருந்தே ராசியிலேயே ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி அடைகிறார். 9 இல் இருக்கம் செவ்வாய் 10 ஆம் இடத்திற்கு வருகிறார். செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் குருவுடன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம் பெறுகிறார்.
2 ஆம் அதிபதி 10 ஆம் வீட்டில் இருப்பது பணத்திற்கு அடித்தளமிடக்கூடிய காலகட்டமாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடந்த மாதத்தில் அந்தஸ்து, கெளரவம், மதிப்பை இழந்தவர்கள் அவை அனைத்தையும் மீட்டெடுக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். கெளரவம், மதிப்பு, மரியாதை கூடும். பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகும்.
யோகம்
பெண்களுக்கு சிறப்பு நன்மைகள் ஏற்படும். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு பெறும் யோகம் உண்டு. இளம்பெண்கள் மேற்படிப்பு படிக்கக்கூடிய யோகம் ஏற்படும். வேலையில் இதுவரை இல்லாத நிலைமைகளுக்குச் செல்வீர்கள். ஆண்களால் அனுபவித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். ஆண்களை விட புத்திசாலிகள் என்பதை நிரூபிக்கக்கூடிய மாதமாக இருக்கும்.
தொட்டது துலங்கும். எதையும் திறம்பட முடிவெடுப்பீர்கள். இரண்டாவது திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும். ராசியில் சுக்கிரன் அமர்ந்து 7 ஆம் இடத்தை பார்ப்பதாலும், 7 ஆம் அதிபதி நீசபங்க ராஜயோகத்தில் வலிமையாக இருப்பதாலும் எல்லா விஷயங்களும் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகளுக்கு மாதத்தின் ஆரம்பத்திலேயே பெரிய அளவுக்கு லாபங்கள் ஏற்படும். செம்மண் விவசாயம் செய்வோருக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும்.
பண வரவு
எல்லா விஷயத்திலும் நன்மைகள் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். வியாபாரம் நன்றா இருக்கும். அண்ணன் தம்பி உறவு செழிப்பாக இருக்கும். பெற்றோர் பெரியோர் விஷயத்தில் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்டங்களும், முன்னேற்றமும் நிறைந்த மாதமாக இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு அமையும். படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு மாதத்தின் முதல் பகுதி முழுவதும் ராசியிலேயே இருக்கிறார். அதன் பிறகு, ராசிக்கு 2 ஆம் இடத்திற்கு வருகிறார். எல்லா விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். கெளரவத்திற்கு எந்த பாதிப்பும் வராது. மனக் கலங்கள் இருந்து கொண்டே இருக்கும். அஷ்டமத்தின் சனியின் தாக்கம் பூரத்திற்கு இருந்து கொண்டே இருக்கும்.
மாதத்தின் முதல் 15 நாட்கள் ஆவணி மாதமாக இருப்பதாலும், ராசிநாதன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். தொழில் நன்றாக இருக்கும். வியாபார முன்னேற்றம் ஏற்படும். திரும்ப வராமல் இருந்த கடன்கள் திரும்பி வரக்கூடிய அமைப்பு ஏற்படும். பணத்தை வைத்து சமாளிக்கும் நல்ல தன்மைகள் ஏற்படும்.
நீசபங்க ராஜயோகம்
2 ஆம் இடத்தில் 7 ஆம் தேதிக்குப் பிறகு உச்ச புதனாக இருந்து, 3 ஆம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கிறார். 12 ஆம் இடத்தில் செவ்வாய் நீசபங்க ராஜயோகத்தில் இருப்பது எல்லாவற்றிலும் நிதானத்தையம், நல்ல தன்மையும் ஏற்படும். தொழில் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மற்றவர்கள் உதவக்கூடிய சூழல் ஏற்படும்.
வெளிநாடு, வெளிமாநிலத்தில் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் வேலையில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். விசா தொடர்பான பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். தேவையில்லாத மன குழப்பங்கள் எல்லாம் நீங்கி மன தைரியம் அதிகரிக்கும். பயண ரீதியான அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மனநிம்மதி
இந்த மாதம் முழுவதும் 4 முதல் 5 பயணங்கள் ஏற்படும். அதன் மூலம் நல்ல மன நிம்மதி, ஆறுதல் கிடைக்கும். சகோதரர்களால் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு விரயங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். லாபம், பணவரவு அற்புதமாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு அட்டகாசமான மாதமாக இந்த மாதம் இருக்கும். 8 ஆம் இடத்தில் நீசபங்க ராஜயோகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருக்கின்றனர். 10 இல் உச்ச புதன், 11 இல் சுக்கிரன் அமர்ந்திருக்கும் சுபமாதமாக இருக்கும். ராசிக்கு எதிரியான சுக்கிர பகவான் 11 ஆம் இடத்தில் வரும்போது நிறைய நல்ல பலன்களைத் தருவார். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என 3 மாதங்கள் வரை சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார் என்பதால் சட்டப்பூர்வமான விஷயங்களில் சாதமான நிலைமை இருக்கும். சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.
தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். நிலம், இடம், வரப்பு போன்ற சட்ட சிக்கல்கள், காவல் துறை தொடர்பான எல்லா பிரச்சனைகளில் வெற்றி பெறுவீர்கள். சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள். சோஷியல் மீடிய இன்ப்ளூயன்சர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிலையற்ற தன்மைகள் எல்லாம் மாறி வலிமை பெறுவீர்கள். சொந்தத் தொழில், சொந்த வியாபாரம் அமையும் யோகம் உண்டு.
தொழிலில் ஜாக்பாட்
ஏற்கனவே சொந்த தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகமாக இருக்கும். விவசாயிகளுக்கு அற்புதமான மாற்றங்கள் உண்டாகும். பச்சை நிறத் தொழிலில் தொடர்புடையவர்களுக்கு பெரிய நல்ல மாற்றம் ஏற்படும். கன்சல்டிங், அறிவுரை தொழில், சோஷியல் மீடியா என அறிவைப் பயன்படுத்தக்கூடிய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். அக்கா, தங்கை, அண்ணன்கள் மூலமாக நன்மைகள் ஏற்படும். பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் புதிய நல்ல பலன்கள் கிடைக்கும்.
முன்னேற்றம்
நெருப்பு, கட்டடத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நன்மைகள் ஏற்படும் காலகட்டம். தேக்கமாக இருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றங்கள் ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு அவ்வளவாக நல்ல நிலைமை இல்லை. ஜென்ம சனியால் பாதிப்படைந்து வருகின்றனர். மிகுந்த மனச் சோர்வில் இருப்பீர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு இப்போது நல்ல நிலைமை ஏற்படும்.
ஜென்மச்சனியின் ஆதிக்கம் குறைவாக இருப்பதால் பிரச்சனைகளைத் தாங்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும். குரு புதன் பார்வையில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். சமீபத்தில் பழக்கவழக்கங்கள், தொடர்புக்கு அடிமையானவர்கள் எல்லோரும் மனம் திருந்தக்கூடிய மாதமாக இருக்கும். உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ளும் மாதமாக இருக்கும்.
கவனம்
ஆண்களால் பெண்களுக்கு ஏமாற்றமும், பெண்களால் ஆண்களால் ஏமாற்றமும் ஏற்படும். காதவ் அமைப்புகளில் பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்காது. 8 இல் சுக்கிரன் இருப்பதால் ஏமாற்றம் நிச்சயம் ஏற்படும். இளம் வயது பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம். காதல் வாழ்க்கை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானமாக இருப்பது நன்மை பயக்கும்.
வருமானம் பெருகும்
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகழ் கிடைக்கும். நல்ல வருமானங்கள் உண்டாகும். அறிவை உபயோகப்படுத்தி செய்யக்கூடிய தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்லவை கண்டிப்பாக நடக்கும். சொத்து சேரக்கூடிய யோகம் உண்டாகும். வீடு வாங்குவது, நிலம், இடம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும்.
மீன ராசி பெரியவர்களுக்கு சங்கடங்கள் எதுவும் இருக்காது. இரண்டாவது சுற்று செயல்படுவதால் லாபங்கள் ஏற்படும். தொழில் நன்றாக இருக்கும். வெற்றிகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குடும்பத்துக்கு, பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்வீர்கள். வயதுக்கு ஏற்றாற்போல நல்ல பலன்கள் கிடைக்கும் மாதம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
