“நான் வந்துட்டேன்னு சொல்லு!” தனுசு ராசிக்கு செப்டம்பரில் அதிர்ஷ்டம்.. பணவரவு, பதவி உயர்வு

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

september-rasi-palan-dhanusu-rasi-people-will-get-property-gains-financial-growth

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு நல்ல காலம் ஆரம்பிக்கப் போகிறது. யோகாதிபதி செவ்வாய் விபரீத ராஜயோகத்தை தரப் போகிறார். உங்களுடைய அறிவுதான் மிகப்பெரிய பலம். 7க்கு உரிய புதன் 10 இல் உச்சமாகி இருக்கிறார். வேலையில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். பெயர், புகழ் அதிகரிக்கும். பதவி உயர்வு, வெளிநாடு செல்வது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

யோகம்

8 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருக்கிறார். செப்டம்பர் 17 ஆம் தேதி சூரிய பகவான் கன்னி ராசிக்குச் செல்கிறார். அரசனைப் போல யோகம் உண்டாகும். மீனத்தில் சனி பகவான் இருக்கிறார். 10 இல் சூரிய பகவான் அமர்கிறார். சனி பகவான் 10 ஐ பார்த்தால் பெரும்புகழ் கிடைக்கும். சூரியன் அக்டோபரில் துலாம் ராசியில் நீசமாகிறார். சனி பகவான் டிசம்பர் வரை உங்களுக்கு அனுகூலம் செய்வார். அரசியல் நிமித்தமாக அழைப்பு வந்தால் அக்டோபர் மாதம் செல்வது நல்லது.

பணவரவு

11க்கு உடைய சுக்கிரன் ஆட்சி அடைகிறார். சுக்கிரன் ஆட்சி பெறும்போது அங்கு சூரியன் வந்து அமர்கிறார். மாமனாரிடம் இருந்து பணங்கள் வந்து சேரும். தொழில் விரிவாக்கம், தொழில் செய்வதற்கு கடன்கள் கிடைக்கும். பணம் வரும் வழிகள் உங்கள் கண்ணுக்குத் தெரியும். பெண்களின் மூலமாக பணம் வந்து சேரும் யோகம் உண்டு. மனைவியின் ராசியால் முன்னேறும் யோகம் உண்டு.

தொழில்

தனுசு ராசி பெண்களுக்கு சுக்கிரன் ஆட்சி பெறுவதால் அழகு கூடும். ஸ்டேஜ் ஏறும் யோகம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, கலைஞர்களுக்கு யோகம் உண்டாகும். மீடியா எனும் பெறும் வெளிச்சம் உங்கள் மேல் படும். பிரகாசமாக மாறும் யோகம் உண்டு. பிரபலமாகும் வாய்ப்பு ஏற்படும். இந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணிச்சுமை, டென்ஷன் இருந்தாலும் யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

செப்டம்பர் 20 ஆம் தேதி வாழ்க்கையே மாறப்போகிறது. வசந்த காலம் உண்டாகும். செவ்வாய் பகவான் விபரீத ராஜயோகம் பெறுவதால் அற்புதமான யோகம் உண்டாகும். வியாழக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்று வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் கேட்பது நல்லது.

கவனம்

சூரிய வழிபாடு நன்மை. செப்டம்பர் 31 ஆம் தேதி மகா சங்கடகர சதுர்த்தி உங்களுக்கு மேன்மையைத் தரும். உச்சிஷ்ட கணபதி ஹோமம் செய்து கொள்வது நல்லது. 7, 8, 9 ஆம் தேதி அமைதியாக இருப்பது நன்மையைத் தரும். அளவுக்கு மீறிய ஆசையைத் தவிர்ப்பது நல்லது. பதவி, வெளிநாடு மோகத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+