“இனி நல்ல காலம்தான்”.. மகர ராசிக்கு செப்டம்பரில் சொத்து சேரும் யோகம்.. பணவரவு அதிகரிக்கும்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் மகரம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

september-rasi-palan-magaram-rasi-people-will-get-property-gains-financial-growth

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசியினருக்கு 9க்கு உடைய புதன் பகவான் உச்சமாகப் போகிறார். புதன் உங்களுக்கு லாபம், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிறார். கடனை அடைக்கும் முயற்சிகளில் இந்த மாதம் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. கடனில் இருந்து வெளிவரக்கூடிய எந்த உத்திகளும் இந்த காலத்தில் நடக்காது. மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இஎம்ஐக்களை ஒருங்கிணைத்து ஒரே கடனுக்கு கீழ் கொண்டு வரும் செயல்கள் சரிவராது.

இடம் வாங்கும் யோகம்

8க்கு உடைய சூரிய பகவான் ஆட்சி பெறுகிறார். செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் புதிய வெளிச்சம் உண்டாகும். புகழ், அரசியல் சர்ச்சை போன்றவை சரியாகும். 20 ஆம் தேதி செவ்வாய் பகவான் கடக ராசியில் நீச்சமடைந்து நீசபங்க ராஜயோகம் அடைகிறார். ஏற்கனவே உச்சம் பெற்ற குருவோடு சேர்ந்து செவ்வாய் அதிமங்களங்களை தரப்போகிறார். இடம் வாங்கிக் குவிக்கும் யோகம் உண்டாகும், வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற அமைப்பு ஏற்படும்.

லாபம், மகிழ்ச்சி

சூரியன் இந்த மாதத்தின் கடைசியில் மறையப் போகிறார். கன்னியில் இருப்பவர் துலாமிற்கு செல்வதால் மிகப்பெரிய யோகம் ஏற்படும். புதனும், சுக்கிரனும் அதற்கு முன்பே துலாம் ராசிக்கு வந்துவிடுகின்றனர். இதனால், லாபமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்ட நாளாக இருக்கும். வெள்ளை நிற ஆடைகள் அணிவது நன்மை.

பரிகாரம்

விசாகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று நல்ல காரியங்களைச் செய்வது நல்லது. கோவில் முன்பு இருக்கும் நிலத்தை சமன்படுத்துவது, சுத்தப்படுத்துவது நன்மை பயக்கும். இல்லையெனில் சத்ரு சம்ஹார யோகம் செய்வது ஏற்றததைத் தரும். முருகன் வழிபாடு, முருகன் பாடல்களை கேட்பது நல்லது. 5, 6 ஆம் தேதி அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கவனம் தேவை.

வழிபாடு

ராகு பகவான் உங்களை நோக்கி டிசம்பர் மாதம் பயணித்து வருவதால் விவாகரத்து சம்பவங்களில் ஈடுபடுவோர் சிறிது பொறுத்திருப்பது நல்லது. கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது, சிவப்பு நிற மலர் வைத்து முருகரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+