விருச்சிகம் ராசிக்கு அற்புதமான செப்டம்பர்.. பணவரவு அதிகரிக்கும்.. ஆனால் இந்த விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்த மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு முக்கிய யோகங்கள் உருவாக உள்ளன. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

september-rasi-palan-viruchigam-rasi-people-will-get-property-gains-financial-growth

துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால் இந்தப் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. புதன் துலாம் ராசியில் நுழைகிறார். புதனின் சொந்த வீடான கன்னியில் அவர் அமர்வதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. செவ்வாயுடன் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை ஏற்படும் காலகட்டத்தில் புதாதித்ய யோகம் உருவாகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசியினருக்கு நேர விரயம் ஏற்படுவதற்கான மாதமாக இருக்கும். பார்ட்னர்களை நம்பாமல் நீங்களே வேலையில் இறங்குவது நன்மை பயக்கும். மேஷம், சிம்மம், தனுசு ராசி பார்ட்னர்களால் எந்தவித நன்மைகளும் உங்களுக்கு நடக்காது. 12க்கு உரிய சுக்கிரன் ஆட்சி பெறுவதால் பார்ட்னரால் விரயங்கள் நிச்சயமாக ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ராஜயோகம்

1க்கு 6க்கு உரிய செவ்வாய் பகவான் கடகத்தில் நீச்சபங்க ராஜயோகம் அடைகிறார். ஆரோக்கியம் மேம்படும். நீண்டநாட்களாக இருந்து உடல்நலப் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். சூரிய பகவான் கன்னிக்கு வரும் 18 ஆம் தேதி உங்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 10க்கு உடைய சூரிய பகவான் கன்னிக்கு வருவதால் தொழில், வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய லாபங்கள் கொட்டும். மக்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

செல்வம் சேரும்

8க்கு உரிய புதன் பகவான் 3 ஆம் தேதி 11 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். நண்பர்களால் கிடைக்கக்கூடிய லாபங்கள் அதிகரிக்கும். யாரிடமாவது இருந்து உதவி பெற வேண்டும் அல்லது ஆதாயம் பெற வேண்டும் என்றால் 24 ஆம் தேதிக்கு முன்பு கேட்பது நல்லது. 8க்கு உடைய புதன் 12 இல் சுக்கிரனுடன் மறைவதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். செல்வம் உங்களை வந்தடையும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மியூட்சுவல் ஃபண்ட், நிதி, பங்குச் சந்தை ஷேர், முதலீடு போன்றவற்றில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். 20 ஆம் தேதி இதுபோன்ற விஷயங்களைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும். மகான்கள் வழிபாடு, சித்தர் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ஜீவசமாதிகளுக்குச் செல்வது, ராகவேந்திரர், மகரிஷி வழிபாடுகள் ஏற்றத்தைக் கொடுக்கும்.

எதிர்பாலினத்தவருடன் கவனம்

தங்கம் அணிவது ஏற்றத்தைத் தரும். குடும்பத்துடன் இணக்கமாகதச் செல்வது நன்மையைத் தரும். 4 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் உங்கள் பெயரைக் கெடுக்கும் சூழல் ஏற்படும். எதிர்பாலினத்தவரால் உங்கள் பெயர் கெடும் அபாயம் உள்ளது. அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் அளவாக வைத்துக் கொள்வது நல்லது.

எதிர்பாலினத்தவருடன் பேச்சுவார்த்தை கூட வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை. அப்படி வைத்துக் கொண்டால் பெயர் கெடுவது, கணவன், மனைவி கூட சந்தேகப்படும் சூழல் போன்ற அமைப்புள்ளதால் கவனம் தேவை. உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டில் சிக்கிக் கொள்ளும் சூழல் உள்ளதால் அமைதியாக இருப்பது நல்லது. ராகு பகவானுக்கு ஹோமம் செய்வது, திருப்பாம்பரம் செல்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+