செவ்வாய் பெயர்ச்சி 2025: மீனம், கும்பம், சிம்மம், கடகம் ராசிகளுக்கு ஜாக்பாட்.. செல்வம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: வரும் 2025 புதிய ஆண்டில் பெயர்ச்சி ஆகும் செவ்வாய் கிரகம் முழுமையான பலத்தை அடையப் போகிறது. இதனால், செவ்வாயின் பலமும், செல்வாக்கும் அதிகரித்துக் காணப்படும். புத்தாண்டில் செவ்வாய்ப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். எந்தெந்த ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... (Sevvai peyarchi 2025)

புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டில் நினைத்த காரியங்களை சரியாக திட்டமிட்டு வெற்றிகரமாக முடிக்க வேண்டும். சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கும். 2025 புத்தாண்டின் அரிய நிகழ்வாக இந்தாண்டு சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

sevvai peyarchi

ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் அள்ளிக் கொடுக்கும். அதேபோல, வேத சாஸ்திரத்தின்படி செவ்வாய் கிரகம் மிகவும் சாதகமான பலன்களைத் தரக்கூடிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகம் சிறப்பு வாய்ந்த கிரகமாகும். தன்னம்பிக்கை, பலம், தைரியம், உத்வேகத்தின் அடையாளமாக செவ்வாய் கிரகம் கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் வரும் 2025 ஆம் ஆண்டில் அந்த கிரகம் முழு பலத்திற்கு வரவுள்ளதால் அதனுடைய செல்வாக்கு மிகவும் அதிகமாக இருக்கும். அந்த வகையில், 2025 புத்தாண்டில் செவ்வாய்ப் பெயர்ச்சியில் எந்தெந்த ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகும். எந்தவிதமான நற்பலன்ளைப் பெறுவார்கள் என்று விரிவாகப் பார்க்கலாம்..

மீனம் (Sevvai peyarchi for Meenam):
செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு சாதகமான ஆண்டாக அமையும். பண வரவு உண்டாகும். நிதி சார்ந்த ஆதாயத்தைப் பெறுவீர்கள். புதிய வியாபாரம், தொழிலைத் தொடங்குவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமண யோகத்திற்காக காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். புதிய வரன்கள் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். பொருளாதார சூழல் மேம்படும். கடந்த காலங்களில் இருந்து வந்த பணம் சார்ந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும்.

கும்பம் (Sevvai peyarchi for Kumbam):
செவ்வாயின் பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு சிறப்பான மாற்றத்தை தரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்களது வேலையால் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என வெற்றியைக் காண்பீர்கள். உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம் (Sevvai peyarchi for Simmam):
சிம்ம ராசியினருக்கு 2025 புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது. தன்னம்பிக்கை, மன தைரியம் அதிகரிக்கும். பணம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுதலையாவீர்கள். கடன் பாக்கியை செலுத்துவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவு உண்டாகும். பொருளாதார சூழல் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம் (Sevvai peyarchi for Kadagam):
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகப் பெயர்ச்சியால் பங்கு சந்தையில் முதலீடு செய்வது, புதிய சொத்துகளை வாங்கும் யோகங்கள் உண்டாகும். பண வரு அதிகரிக்கும். வருமானம் பெருகும். பழைய நண்பரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+