மிதுன ராசியின் பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. செவ்வாயின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழில், வேலை, திருமணம் சார்ந்த விஷயங்கள், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.
அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 3 ஆம் இடத்தில் செவ்வாய் பெயர்ச்சியாகி உள்ளார். நீச்சமாக இருந்த செவ்வாய் பகவான் நல்ல உச்ச நிலைக்குச் செல்லவுள்ளார். ஜூலை 28 ஆம் தேதி வரை இந்த இடத்தில் செவ்வாய் பகவான் இருக்கப் போகிறார். 3 ஆம் இடம் என்பது முயற்சியைக் குறிக்கக் கூடிய இடம். நிறைய முயற்சிகள் செய்து தோல்வி அடைந்திருப்பீர்கள். ஏதோ ஒரு பிரச்சனை நீங்கள் செல்லும் இடத்திலெல்லாம் இதுவரை இருந்து வந்திருக்கும்.
போட்டிகளில் வெற்றி
சண்டை சச்சரவு, தேவையில்லாத பழக்கம், தகாத உறவுகள், காவல் நிலையம், வம்பு, வழக்கு என பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். மாற்றமே இல்லை என்று வருத்தப்பட்ட உங்களுக்கு இனி அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். செவ்வாய் லாபாதிபதியாக இருப்பதால் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி அடைவீர்கள்.
வேலை
7 ஆம் பார்வையாக 9 ஆம் இடத்தையும், 8 ஆம் பார்வையாக 10 ஆம் இடத்தையும் பார்ப்பதால் ஜூலை 28 ஆம் தேதி வரை எதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது, என்ன பிரச்சனை, எதனால் பிரச்சனை என்பதை யோசித்து செயல்படுவது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு நிறைய குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு என்ன வேலை செய்யலாம், எதை செய்தால் நன்மை, வெளியூர் செல்லலாமா, வெளிநாடு செல்லலாமா என்ற முடிவை எடுக்கும் சூழல் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கட்டாயமாக கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்பதால், முயற்சிகளைக் கைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது நல்லது.
கடன்கள் தீரும்
நிறைய மிதுன ராசிக்காரர்கள் புதன், சனி திசையில் தான் அதிக அளவில் தோற்பதற்கான சூழல் உண்டாகும். அதை மட்டும் சுய ஜாதகத்தைப் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது. இடத்தை விற்பது, வாங்குவதற்கான அற்புதமான சூழல் உண்டாகும். இடத்தை விற்றுவிட்டு அதன் மூலமாக வரும் பணத்தில் ஒரு நிலத்தை வாங்கிவிட்டு, மற்ற கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். விற்க முடியாத நிலம் எல்லாம் விற்கும் யோகம் வரும்.
பாக்கியம்
செவ்வாய் பகவான் 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இடமாற்றம், வேலைமாற்றம் செய்வது நல்லது. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். கடன் வாங்கி வெளிநாட்டில் சென்று படிப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications