வெச்ச குறி இனி தப்பாது.. ரிஷபத்துக்கு சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.
அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 7 ஆம் அதிபதி. ராசிக்கு 4 ஆம் இடத்தில் செவ்வாய் பெயர்ச்சியாகியுள்ளார். ஜூலை 28 ஆம் தேதி வரை உங்கள் ராசியில் இருந்து யோக பலன்களைத் தரப் போகிறார். கேந்திர ஸ்தானத்தில் செவ்வாய் பெயர்ச்சியாவதால் எண்ணற்ற வளர்ச்சிகள் கிடைக்கும். பலவிதமான நன்மைகள் ஏற்படும். இடம், வீடு, கார், இருசக்கர வாகனம் வேண்டும். குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், அதற்கான வரவு வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்.
சொத்துகள் வாங்கும் யோகம்
4 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகத்தை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகிறார். இடம் வாங்கி சிக்கலில் சிக்கியது, இடத்தல் தொந்தரவு, கடன் அளவு அதிகமாகி வேலை தொழில் பிரச்சனை உள்ள நபர்களுக்கு இடத்தை விற்பனை செய்யும் அமைப்பு உண்டாகும். ராசிக்கு 7 ஆம் பார்வையாக செவ்வாயின் பார்வை இருப்பதால் இந்த காலகட்டத்தில் திருமண யோகம் கைகூடி வரும்.
திருமணம்
திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மா அப்பாவின் கூட பிறந்தவர்களால் வாழ்க்கையில் மனைவியை, கணவனை இழக்கும் அமைப்பு உள்ளதால், யாரையம் கூப்பிடாமல் நீங்களாகவே திருமணத்திற்கான முயற்சியை எடுப்பது நல்லது. பெற்றோரே உங்கள் பிள்ளைகளை திருமண விஷயங்களில் முடிவெடுக்கச் சொல்வது நல்லது.
தொழில்
செவ்வாய் 10 ஆம் இடத்தை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் ஜூலை 28 ஆம் தேதிக்குள் நல்ல வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள். அதன் மூலமாக நீண்ட நாட்கள் பயனை அடைவீர்கள். தொழிலில் இருந்து வரும் கடன் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய நேரமாக இருக்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பொருளாதார வரவுகள் உண்டாகும். செலவைக் குறைப்பதற்கான வகைகளைக் காண்பது நல்லது.
லாபம்
8 ஆம் பார்வையாக 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் விசேஷமான அமைப்பாக இருக்கும். கண்டிப்பாக தொழிலில் லாபத்தை தரக்கூடிய அமைப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், சாஃப்ட்வேர் துறை, எல்லா இன்ஜினியரிங் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழிலில் மிகப்பெரிய வெற்றிகள் வந்து சேரும்.
உத்தியோகம், வழிபாடு
வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு ராகு திசை நடந்தால் வேலை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையை விடாமல் செய்து கொண்டே இருப்பது நல்லது. வேலையை விட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்த்த சம்பளம், பதவி கட்டாயமாக கிடைக்கும். முருகப் பெருமானை அடுத்த 42 நாட்கள் பிரார்த்தனை செய்வது, கந்த சஷ்டி கவசம் சொல்வது மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தும்.
வெளிநாடு யோகம்
பூமி லாபம் உண்டாகும். பூமி விற்பது, வாங்குவது செய்ய சரியான காலகட்டம், வெளிநாடு வாய்ப்பு உண்டாகும். பிஆர் கிடைக்கும். நல்ல உத்தியோகம் கிடைக்கும். வேறு நாடு செல்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். படிக்கக்கூடிய மாணவர்கள் வெளிநாட்டில் சென்று படிக்கும் வாய்ப்பு, வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications