காசு மேல.. காசு கீழே.. காசு சைடுல.. செவ்வாய் பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்கு சூப்பர் யோகம்
சென்னை: ஆங்கில புத்தாண்டு, தை மாதம் என அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் செவ்வாயில் செவ்வாய் கிரக பெயர்ச்சியும் உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த தொகுப்பில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு ஏற்படும் பலன்களை காணலாம்.
செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்தியோக அமைப்பு நன்றாக இருக்கும். செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருந்திருக்கும். இந்நிலையில் செவ்வாய் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

விருச்சிக ராசிக்கு செவ்வாய் உங்களின் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நீச்சமாக இருந்தார். இதனால் உங்களுக்கு எந்த காரியத்திலும் தவிர்க்க முடியாத வகையில் தாமதம் ஏற்பட்டிருக்கும். குழந்தைகள், ஆரோக்கியம், வழக்கு, வியாபாரம் என எல்லாவற்றிலும் தாமதம் ஏற்பட்டிருக்கும். செவ்வாய் விரய ஸ்தானத்தை பார்ப்பதால் செலவுகள், கவலைகள் அதிகமாகிருக்கும்.
தற்போது செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து எட்டாம் இடத்துக்கு செல்லவுள்ளார். எட்டு என்பது எதிரிகள் ஸ்தானம். அதனால் உங்களின் எதிரிகள் மறைவார்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் உள்ள எதிரிகளை அடக்கி அதன் மூலம் உங்களுக்கு பெயர் கிடைக்கும்.
செவ்வாய் எட்டாம் இடத்தில் இருந்து 11 மற்றும் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் உங்கள் வாக்கு ஸ்தானம் பலமடையும். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். அதேநேரத்தில் உங்களின் பேச்சால் குடும்பம், மூத்த சகோதர, சகோதரிகளுடன் கருத்து மோதல் ஏற்படும். அதன் மூலம் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைக்கும். எதிரிகள் துவம்சம் ஆவதாலேயே வருமானம் அதிகரிக்கும். தொழிலில் மேன்மை இருக்கும். இந்த 82 நாட்கள் உங்கள் வருவாய் அதிகரிக்கும். எப்போதோ நீங்கள் செய்த முதலீட்டில் இருந்து கூட எதிர்பாராத விதமாக லாபம் கிடைக்கும்.
பணம் வராது என்று நினைத்த இடத்தில் இருந்துக் கூட திடீரென பணம் வரும். சில நேரம் அடுத்தவர்கள் மீது நீங்கள் வைக்கும் விமர்சனங்கள் உங்களுக்கு அவப்பெயரை உருவாக்கும். சிலருக்கு குடும்பத்திலோ அல்லது நெருங்கிய உறவுகளிலோ உள்ள குறிப்பிட்ட நபர் உங்களை விட்டு பிரியும் நிலை ஏற்படும். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பணம் வரவு இருந்தாலும் உறவுகளில் விலகல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரிய மனிதர்களிடம் பேசும்போது சற்று கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் உங்கள் மரியாதையை நீங்களே கெடுப்பது போல ஆகிவிடும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் இருந்து வரும் பண வரவை தவிர்ப்பதால் வீண் சிக்கல்களையும் தவிர்க்கலாம்.
மொத்தமாக உங்களின் வார்த்தைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெருமாள், ஹயக்ரீவர், ஆஞ்சநேயர் வழிபாடு மூலம் வாக்கு ஸ்தானம் பலமடையும். வாக்குகளால் வரும் பிரச்னைகள் நீங்கும். மேலும் தடைகள் நீங்கி உங்களின் சுய முயற்சியால் வெற்றி பெறும் யோகமும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications