Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை.. பேச்சில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.
வாக்குவாதம் வேண்டாம்
துணையுடன் மனம் விட்டுப் பேசுவது சங்கடங்களைத் தீர்க்கும். நம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். சிம்ம ராசிக்கு எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம். சுப காரியத்தில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். உறவினரிடத்தில் மட்டும் தர்க்கம், வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
முன்னேற்றம்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இதுவரை இருந்து வந்த மன சங்கடங்கள், மன அழுத்தங்கள் தீரும். தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். அடுத்தடுத்த முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியை ஏற்படுத்தும். நிச்சயமாக யோக பலன்கள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை, குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். காரியசித்தி மாலை சொல்வது எல்லா விதத்திலும் அனுகூலத்தை அதிகரிக்கும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், அரசியல்வாதிகள் அனைவரும் அனுகூலத்தைப் பெறுவார்கள்.
-
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications