Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு சுக்கிரனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. வெளிநாட்டிற்கு பறக்கும் யோகம்
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் கடக ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 12 ஆம் இடம் எனும் விரைய ஸ்தானத்தில் அமர்கிறார். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3க்கு உரியவர். தைரிய, வீரியத்துக்கு உரியவர். 12 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து பலனைக் கொடுக்க போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுடைய முயற்சியால் வெளிநாட்டு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டின் மூலமாக அனுகூலம், ஆதாயம் கிடைக்கும்.
வாய்ப்புகள் வரும்
தூர தேச பிரயாணங்களைச் செய்வீர்கள். தகவல் தொடர்புத் துறை, நெட்வொர்க் துறையில் இருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் உண்டு. புதன் பகவானுடன் சுக்கிரன் இணைவதால் வாய்ப்புகள் எளிதாக உங்களுக்கு கிடைக்கும். 10க்கு உரிய சுக்கிரன் 12 ஆம் இடத்திற்கு சென்றிருப்பதால் அச்சப்படத் தேவையில்லை. தொழில் ஸ்தானதிபதி விரைய ஸ்தானத்துக்கு சென்றுள்ளதால் அலைச்சல், கடின உழைப்பு, டென்சன், அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மாற்றம்
ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் கூடுதலாக ஒரு வேலையை உருவாக்குவீர்கள். நிறைய பேருக்கு இடமாற்றம் கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் புதிய கிளை, கூடுதல் தொழிலை தொடங்கும் யோகம் உண்டு. தொழிலில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபார நுணுக்கங்கள் அதிகமாக இருக்கும்.
தொழில்
ஏற்றுமதி, இறக்குமதி துறை, கன்சல்டன்சி, கமிஷன் தொடர்பான துறைக்குச் செல்லலாமா என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை புனர்பூசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கிறார். குழந்தைகளைப் பற்றிய எண்ணங்கள், குழந்தைகள் வெளிநாடு செல்லும் யோகம், வெளிநாட்டில் கல்வி பயில்வது, அரசாங்க வேலைக்குச் செல்வது போன்ற நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். குழந்தைகள் திருப்தியாகும் விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
கடன் வேண்டாம்
ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை சுக்கிரன் பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். சனி உங்களுக்கு 6க்கு உரியவர் தற்போது 8 இல் அமரப் போவதால், கடன் விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. யாருக்காவது பணம் கொடுத்திருந்தால் அது திரும்பி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆழ்மனதில் தவறு என எழுகின்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
வேலையை விட்டுடாதீங்க
வேலையில் எந்த பிரச்சனை வந்தாலும் வேலையை விடாமல் இருப்பது நல்லது. அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. செப்டம்பர் 4 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கப் போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும்.
வீடு கட்டும் யோகம்
நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும். கடனை வாங்கி வீட்டை கட்டும் யோகம் உண்டாகும். வீட்டை புனரமைப்பது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். ஆசைப்பட்ட வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வீர்கள்.
வழிபாடு
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள், ஆசி கிடைக்கும். குரு 5 ஆம் இடத்தையும், சுக்கிரன் ஆம் இடத்தையும் பார்ப்பதால் வெளிநாட்டு யோகம், கடன் கிடைக்கும். ஆவணி 31 ம் தேதி சுக்கிர ஜெயந்தியன்று, நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு சாற்றி வழிபடுவது, 6 நெய் விளக்கு தீபமேற்ற வழிபடுவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications