Simmam: அஷ்டமசனியைக் கண்டு அச்சம் வேண்டாம்.. சிம்ம ராசிக்கு மே மாதத்தில் காத்திருக்கும் ஜாக்பாட்
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத ரிஷபம் ராசிக்கான கிரக பலன்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே முதல் 15 நாட்களுக்கு ராசிநாதன் சூரியன் உச்சம் என்கிற நிலையில் இருக்கிறார். பின்னர், 10 ஆம் இடத்துக்கு மாறுகிறார். மாதம் முழுவதும் ராசிநாதன் வலுவாக உச்சம் போன்ற அமைப்பில் இருப்பதால் எதிர்ப்புகளை அடக்கி ஆளும் தன்மை ஏற்படும். நோய்கள் எதுவும் இருக்காது. மனதிற்கு கவலை தரக்கூடிய விஷயங்களைத் தீர்ப்பீர்கள்.
அஷ்டமசனி
உயர்வு தரக்கூடிய மாதமாக இருக்கும். அஷ்டமத்து சனி டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை உங்களுக்கு பெரிய பாதிப்புகளையும், கெடுதலையும் செய்யாது. கோச்சாரத்தில் 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் அஷ்டமத்து சனி உங்களுக்கு வேலை செய்யாது. ராசிநாதன் 9, 10 ஆம் இடத்தில் இருப்பது, தொழில் ஸ்தானதிபதியான சுக்கிரன் 10 ஆம் இடத்தில் வலுவாக இருப்பது, லாப ஸ்தானத்தில் குரு இருப்பது உங்களுக்கு யோகத்தைக் கொடுக்கும்.
பிரச்சனைகள் தீரும்
மே மாதம் முழுவதும் இந்த கிரகங்கள் வலிமையாக இருப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நன்றாக இருக்கும். விவசாயம் கைகொடுக்கும். வேலையில் சம்பளம் வரும். மேலதிகாரிகள், முதலாளிகளின் தொந்தரவு நீங்கும். விடுதலை பெரும் காலகட்டமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பேச்சு சார்ந்த தொழிலில் இருப்பவர்களான மார்க்கெட்டிங், ஆசிரியர் துறை, வழக்கறிஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். காசு, பணம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
புதிய உறவுகள்
ராசிநாதன் 10 ஆம் இடத்திற்கு மே மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு மாறுவதாலும், செவ்வாய் ஆட்சியாக வருவதாலும், சூரியன் செவ்வாய் இயக்கம் வலிமையாக இருப்பதால் தொட்டது துலங்கும். மனைவியின் உடல்நிலையில் இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். காதல் அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய உறவுகள் கிடைக்கும். நன்மை தரும் மாதமாக இந்த மே மாதம் உங்களுக்கு அமையும்.
முன்னேற்றம்
வாய்ப்புகளும் சவால்களும் இணைந்த காலமாக இருக்கும். தைரியமாக முடிவெடுத்தால் முன்னேற்றம் நிச்சயம். பணியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் லாபம் இருக்கும், ஆனால் போட்டி அதிகரிக்கும். பணவரவு நல்ல அளவில் இருக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கலாம். செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு உயரும்.












Click it and Unblock the Notifications