Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு சிக்கல்கள் எல்லாம் தீரப்போகுது.. ஜெயிக்கும் யோகம்
Simmam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும். கால்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
பாதிப்புகள் நீங்கும்
விநாயகர் வழிபாடு சகலவிதத்தில் ஏற்றத்தை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எல்லாவிதமான பாதிப்புகளும் படிப்படியாகக் குறைந்து பெரிய அளவில் வெற்றிகள் ஏற்படும். எல்லா விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். செல்வாக்குகள் கூடும். பெயர், புகழ் கிடைக்கும்.
வெற்றி மேல் வெற்றி
வேண்டா வெறுப்பாக சில காரியங்களை நின்று ஜெயிப்பீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும். கூட இருப்பவர்களே காணாமல் போவார்கள். நீங்கள் ஜெயிக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மூத்தவர்களால் பிரச்சனை ஏற்படும். அக்கா, அண்ணனால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
முன்னேற்றம்
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அஷ்டமத்தில் சந்திரன் போய் அமர்ந்தாலும் தெய்வத்துக்காக நிறைய விஷயம் செய்வீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நரசிம்மர் வழிபாடு அற்புதமான அனுகூலத்தைத் தரும்.
வழிபாடு
எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். வாகனங்களில் செல்லும்போது விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. படிக்கட்டுகள், உயரமான இடங்கள், தலைசுற்றல், ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை தவற விடாமல் இருப்பது நல்லது. விநாயகரின் காரியசித்தி மாலையை கேட்பது, படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதாரம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications