Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அள்ள அள்ள பணம்.. உசுப்பேத்துவர்களிடம் உம்முனு, கம்முனு இருங்க
Simmam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பெண்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அடிவயிறு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வண்டி, வாகனங்கள், நகைகளை வாங்கும் யோகம் உண்டு. பஞ்சாயத்து செய்து சில விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து வாங்குவீர்கள். வாரா கடன்கள், வராத பணங்கள் எல்லாம் வந்து சேரும்.
கோபம் குறையும்
வேலைப் பளு அதிகரிக்கும். நேரமில்லாமல் சுற்றக்கூடிய சூழல் உண்டாகும். திடீர் பண வரவு உண்டாகும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. எதுவாக இருந்தாலும் நம்மால் செய்ய முடியும் என்கிற எண்ணம் ஏற்படும். எந்த வருத்தங்கள் இருந்தாலும் அந்த வருத்தங்கள் அனைத்தும் சரியாகக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தேவையில்லாத கோபம், டென்ஷன் எல்லாம் குறையும்.
பயணத்தில் கவனம்
இரவு நேரப் பயணத்தில், உணவு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. திடீர் அதிர்ஷ்டத்தால் வரன் கைகூடும். 7 ஆம் இடத்தில் நிறைய கிரகங்கள் அமர்ந்திருப்பதால் வேலை, மற்றவர்களால் ஏற்படக்கூடிய நன்மைகள் அதிகமாக இருக்கும். கேது இருப்பதால் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் செய்வது வெற்றியைத் தரும்.
கணபதி வழிபாடு
புதிய முயற்சிகளை விட இருக்கும் முயற்சிகளைச் செய்வதே நல்லது. பஞ்சாயத்து செய்து வாங்கக்கூடிய விஷயங்களை வாங்கலாம். அதிக வட்டிக்கு கடன் கிடைக்கும். மறைமுகமாக என்ன நடக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடிப்பீர்கள். கணபதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தொலைதூரத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
மன அழுத்தம்
மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. யாரிடமாவது மன வருத்தங்கள் இருந்தாலும் சமானதானம் செய்து தப்பித்துக் கொள்வது நல்லது. உங்களைப் பற்றி சிலர் உசுப்பேத்தி நல்ல வாழ்க்கையை கெடுக்கக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்கள். அதீத கவனம் தேவை. 24 வயதைக் கடந்த சிம்ம ராசியினர் குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும், தொழிலிலும் உணர்ச்சிவசப்பட்டு பேசாமல் இருப்பது நல்லது.
முன்னேற்றம்
ரத்தத்தில் பரவும் நோய்களில் கவனம் தேவை. வாகனத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளால் தேவையில்லாத மனக்குழப்பமும், சங்கடங்களும் ஏற்படக்கூடிய காலகட்டம். பெற்றோர், பெரியோர், ரத்த பந்தங்கள் நீங்கள் எது பேசினாலும் அதற்கு எதிராகப் பேசக்கூடிய காலகட்டம் என்பதால் கவனம் தேவை. தொழில் ரீதியான நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். ஆரோக்கியம், மன அழுத்தத்தில் கவனம் தேவை.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications