Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு காத்திருக்கும் பேராபத்து.. கண்டத்திற்கு மேல் கண்டம்

Subscribe to Oneindia Tamil

Simmam Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-from-march-30-to-april-5

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)

சிம்ம ராசியினருக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாதவற்றை யோசித்துக் கொண்டிருக்கும் நிலைமை இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பது நல்லது. தெய்வ வழிபாடுகளைச் செய்து கொண்டே இருப்பது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை, குறை ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

பிரச்சனைகள் வரும்

24 வயதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்களை செய்வது நல்லது. சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமின்மை ஏற்படும். பதவியில் இருந்து கீழிறங்கும் நிலைமை ஏற்படும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் என ஏதாவது ஒரு தொந்தரவு கண்டிப்பாக வரும். செல்போனில் பேசும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

இறப்புச் செய்தி

பதட்டத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், சுற்றியிருக்க கூடிய விஷயம், அண்டை, அயலார், உறவினர்கள் விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். அஷ்டமத்தில் சனி, சூரியன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு நெருக்கமானவர்களின் இறப்பு ஏற்படும். இரவு நேர பயணத்தின்போது பணம் பறித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

விபத்து

விபத்துகளில் சிக்குவது, நம்மை பிளாக் மெயில் செய்யும் விஷயங்களில் சிக்குவது, சிராய்ப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பாக்கியத்தில் சுக்கிரன் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நண்பர்கள், சகோதரர்களால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆம் இடத்தில் ராகு, புதன் இருப்பதால் தேவையில்லாத பிம்பத்தைக் கட்டமைக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

வழிபாடு

பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிரிவுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் ரீதியாக 65 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்மைகளைப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். பைரவர் வழிபாடு உங்களுக்கு எல்லா விதமான நன்மையையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+