Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு காத்திருக்கும் அற்புத மாற்றம்.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம்
Simmam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, அரசுத் துறையில் இருப்பவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக அந்த மாற்றங்கள் கிடைக்கும். அஷ்டமத்தில் இருக்கும் சனியால் 36 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறிது கால், முதுகு, வயிறு வலி ஏற்படும், மன அழுத்தம் ஏற்படும் என்பதால் எப்போதும் நரசிம்மரை கும்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்.
பேச்சில் கவனம்
யாரிடத்திலும் தேவையில்லாமல் மன வருத்தப்படும்படி பேசி நட்புகளையும், உறவுகளையும் வீணாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உண்மையாக இருப்பவர்களை உதாசீனப்படுத்தாமல் இருப்பது நன்மை பயக்கும். பொறுமை காப்பது அவசியம். மற்றவர்களைப் பற்றி செல்போன், மெசேஜில் கூட பேசாமல் இருப்பது நல்லது.
நினைத்தது நடக்கும்
பாக்கியத்தில் செவ்வாய் ஆட்சி பலத்தில் இருப்பதால் நினைத்தது நடக்கும். வேலையில் நிறைய பிரஷர் ஏற்படும். சிக்கல்கள், சவால்கள் ஏற்படும் வாரமாக இருக்கும். கால் பகுதியில் பிரச்சனை, எலும்பு தேய்மானத்தால் பாதிப்புகள் வரக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய நட்பு, புதிய பண வரவு ஏற்படக்கூடிய காலகட்டம். புதிய உறவுகள் கிடைப்பார்கள். நம்பிக்கை உண்டாகும். திடீர் சந்தோஷம் ஏற்படும்.
தொழில்
இந்த மாதம் முழுவதும் வேலையில் கவனச் சிதறல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வேலையில் வாங்கியிருக்கும் லோன்கள் தீரக்கூடிய காலகட்டம். மனதிற்கு பிடித்த இடங்களுக்குச் சென்று வரலாம். உங்களை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்வது நல்லது. தொழில் ரீதியாக அனுகூலங்கள், சந்தோஷங்கள் ஏற்படும்.
வழிபாடு
உத்தியோகம் ரீதியாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் செய்யும் இடத்தில் பெயர், புகழ் உண்டாகும். புதிய தொழில் மாற்றம் ஏற்படும். விநாயகர் வழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கும்.
-
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications