Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டம் கைகூடும் வாரம்.. நினைத்த காரியம் நிறைவேறும்!
Simmam Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசியினருக்கு விலை உயர்ந்த பொருள்களை கையாளும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது ஏற்றத்தைத் தரும். பிள்ளையார் வழிபாடு மேன்மையை ஏற்படுத்தும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் மேன்மை, சந்தோஷம் ஏற்படும். மனதில் இருந்து வந்த பாரம் குறையும். ஒருநாள், இருநாள் மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீட்டிற்கு வரக்கூடிய நிலைமை ஏற்படும். புத்துணர்வு ஏற்படும். தேக ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் சரியாகும். பழைய கடன்கள் தீரும். மரண பயம் நீங்கும். அழுவது, கஷ்டப்படுவது, தூக்கததைக் கெடுத்துக் கொள்வது போன்ற நிலைமைகள் எல்லாம் நீங்கும்.
புதிய பொறுப்பு
சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கலாம். புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு தொடர்பான தகவல்கள் மன உற்சாகத்தை தரும்.
கடன் தீரும்
வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உருவாகும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூட அமையலாம். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறைந்து அமைதி நிலவும். கணவன் - மனைவி உறவில் புரிதல் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு மனநிறைவை தரும்.
கவனம்
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் கவனமாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். புதிய திறமைகளை கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். பண விஷயங்கள், பணவரவு, ஏற்றங்கள் ஏற்படுவது என அனுகூலமான அமைப்பு ஏற்படும்.
-
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications