September Matha Palan: சிம்ம ராசிக்கு ஆண் பெண்ணால் வரும் பேராபத்து.. பெரிய அதிர்ஷ்டமும் காத்திருக்கு
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்
சிம்மம்
சிம்ம ராசி, லக்கினக்காரர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. சுக்கிரன், கேது, சந்திரன் இணைவு வரும்போது தேவையில்லாத உறவுகளுடன் இணைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத நபர்களிடம் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. நம்முடைய தரத்திற்கு கீழான நபர்களுடனான தொடர்பு, அதனால் உங்களுடன் செயல்திறன் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் உடல் உஷ்ணத்தால் சளி தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜீரா தொடர்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ராசி அதிபதியான சூரியன் 2 ஆம் இடத்தில் சனியின் வக்கிரப் பார்வையில் புதனுடன் போய் அமரப் போகிறார். பல் தொடர்பான பிரச்சனைகள் வரும். பல் மருத்துவத்திற்கான சீட்டு அரசு மருத்துவமனையில் கிடைக்கும்.
பிரச்சனைகள் தீரும்
பிரச்சனைக்குரிய விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தீரும் காலகட்டம். வராத பாக்கிகள் எல்லாம் உங்களுக்கு வருவதற்கான சூழல் ஏற்படும். வர வேண்டிய பணங்கள் எல்லாம் கொஞ்சம் பிரச்சனையாகி பின்னர் வரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பழைய விஷயங்களை மனதில் வைத்து பிரச்சனைகள் வரும். நிகழ்காலத்தில் நடப்பதை நினைக்காமல் வீட்டில் பிரச்சனை ஏற்படும்.
திடீர் பண வரவு
கேதுவின் இணைவு இருப்பதால் வேலையை விடுவதற்கான வாய்ப்புள்ளது. கேது, சூரியன், சுக்கிரன் ராசியில் இணையும் போது வேலையை விடுவது, ஆர்டர் தட்டிப் போவது போன்றவை ஏற்படும். மேல் வீடு வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. அண்ணன், தம்பிகளுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். திடீர் பண வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
பரிகாரம்
அற்புதமான மாதமாகவும் ஏற்றமும், வளர்ச்சியும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். எதிர்பாலினத்திடம் மட்டும் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ஆண்கள் முடியை வெட்டுவது நன்மை பயக்கும். பெண்கள் சவுரி வாங்கி மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். பாட்டி, தாத்தா போன்றோருக்கு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் ஆஞ்சநேயர். இந்த வழிபாடு உங்களுக்கு நிச்சயமாக ஏற்றத்தை தரும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications