Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. வேலை, உறவுகள், நட்பில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். தொடர்ந்து இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள், சவால்கள் அனைத்தும் நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் அற்புதமான நேரம் இது.
ஆரோக்கியம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். முதுகு வலி, கால் வலி, சளி தொந்தரவுகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவியாக இருந்தால் கணவரிடமும், கணவராக இருந்தால் மனைவியிடமும் இணக்கமாக செல்வது நல்லது. நண்பர்கள், வேலையாட்கள், உடனிருப்பவர்களிடம் கோபத்தை, வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
வேலையில் கவனம்
வேலைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கஷ்டங்களும், பாதிப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இழுத்தடித்து வந்த விஷயங்கள் எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். உடற்பயிற்சி, தியானம் செய்வது ஆரோக்கியத்தில் மேன்மையை மேம்படுத்தும்.
கிரக நிலை
உங்களுக்காக இருப்பவர்களின் மனதை நோகடிக்காமல் இருப்பது நல்லது. இப்போது இருக்கும் கிரக நிலைகள் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் விரும்புவோர் மீது வெறுப்பை ஏற்படுத்தும். நண்பர்கள், உறவினர்கள் விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் இருப்பது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications