உச்சத்தில் சுக்கிரன்.. மேஷம் முதல் கன்னி வரை ராஜயோகம் பெறும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: செல்வ செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி மீன ராசியில் பிரவேசம் செய்து மே 31 ஆம் தேதி வரை உச்ச ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சுக்கிரன் தன்னுடைய ராசியில் 123 நாட்கள் இருப்பார். இந்த நேரத்தில் சுக்கிரனின் நிலையால் பல ராசிகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

சுக்கிரனின் இந்த மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் எந்தவிதமான யோகங்களை உண்டாக்கும். எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்..

sukiran peyarchi rasi palan astrology

மேஷம்: மேஷ ராசிக்காரர்களே சுக்கிரனின் இந்த மாற்றத்தின்போது சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது. உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது நல்ல பலன்களைத் தரும். உங்களுடைய உடல் அதிக எடையைத் தவிர்க்க சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பெண்களுடன் உண்டாகும் சச்சரவுகளை தவிர்ப்பது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த சமயத்தில் மன அமைதிக்கும், உங்களுடைய வளர்ச்சிக்கும் சரியான நேரமாக இருக்கும்.

ரிஷபம்: வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி, வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும் காலமாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சேமிப்பு மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். சமநிலையுடன் இருக்க முயற்சிப்பது நல்லது. நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு வீடு மற்றும் குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் அனுபவிக்கும் யோகம் பெறுவார்கள். எதிர்பாராத பண வரவு மற்றும் வீடு வாங்குவதற்கான யோகம் உண்டு. நண்பர்கள் மற்றும் மனதுக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சமுதாயத்தில் நிதி சார்ந்த பிரச்னைகள் குறையும்.

கடகம்: சுக்கிரனின் இந்த மாற்றத்தின்போது கடக ராசிக்காரர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் உணவுப் பழக்கத்தை கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும். கவனம் செலுத்தாவிடில் உடல்நலனில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு சரியான நேரமாக இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு உரிய மரியாதை அளிப்பது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

சிம்மம்: சிம்ம ராசியினர் செல்வ செழிப்புடன் வாழும் காலமாக இருக்கும். நிதி சார்ந்த பிரச்னைகள் தீரும். உங்களுடைய கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஏற்படும் காலமாக இருக்கும். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான காலமாக இருக்கும். திடீர் பண வரவுகளால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி: சுக்கிரனின் நிலை மாற்றம் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண யோகங்கள் கூடிவரும். அதிர்ஷ்டம் உங்கள் வசமாகும். செல்வ செழிப்புடனும், ஆடம்பரத்துடனும் வாழும் யோகம் உண்டாகும். உங்களுடைய வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். நிதி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+