Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Surya Grahan 2025: சூரிய கிரகணத்தன்று மறந்தும் இதை செய்யாதீங்க?.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

Subscribe to Oneindia Tamil

சூரியகிரகணம் 2025: நடப்பு ஆண்டில் சந்திர கிரகணம் அண்மையில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, இன்று செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தால் உலகில் நிகழப்போகும் மாற்றங்கள், என்ன செய்யலாம், என்ன விஷயங்களை செய்யக் கூடாது, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் சூரிய கிரகணம் ஆரம்பிக்கிறது. இந்த கிரகணமானது 12 மணி 22 நிமிடம் வரை இருக்கும். பிரதமம் என்பது முதன்மை என்று பொருள். ஜெபதப அனுஷ்டானங்கள் செய்வோர் நாளை இரவு 11 மணிக்கு குளித்துவிட்டு ஜெபம் செய்ய ஆரம்பிப்பது நல்லது. சூரிய கிரகணத்தில் பொதுவாக தெய்வத்திற்கு பலம் கிடையாது. அதனால், இரவு நேரங்களில் கோயில்கள் மூடப்படும். ஆனால், ஜெபத்திற்கு மிகப்பெரிய வலிமை உள்ளது.

solar-eclipse-2025-what-to-do-and-what-not-to-do-which-zodiac-signs-should-be-careful-of

எப்போது குளிக்க வேண்டும்?

ஒருமுறை நீங்கள் ஜெபம் செய்தால் 100 தடவை அதன் புண்ணியங்கள் கிடைக்கும். 11 மணிக்கு முதல் முறையும், 11.40 மணிக்கு ஒருமுறையும், 12.23க்கு ஒருமுறை குளித்துவிட்டு அதன் பின்பு உங்கள் வேலைகளைச் செய்யலாம், தூங்கலாம். இந்த சூரிய கிரகணம் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்படுகிறது. சூரியனும், கேதுவும் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

5 ராசிகள் கவனம்

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும். மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும்.

அரசியல்வாதிகளின் உடல்நிலை

சூரிய கிரகணத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிவகங்கை, ஆந்திரத்தில் சிம்ஹாச்சலம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. ஒரிஸா, பீகார், மேற்கு வங்க மாநில முதல்வர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு கண்டம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அரசியல்வாதிகளுக்கு அடுத்த 40 நாட்கள் உடல்நிலைகளில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

பாதிப்புகள்

தமிழகத்தில் கோட்டை எனும் இடங்களில் பாதிப்புகள் ஏற்படும். பிள்ளையார்பட்டி போன்ற பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த கண்டங்களால் அரசியல்வாதிகள் சர்ச்சைகளில் சிக்குவது, ராஜினாமா செய்வது, ஆடியோ, வீடியோக்கள் வெளியாகுவது போன்றவை ஏற்படும். மருத்துவர்களாக இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. சூரியன் என்றாலே ராஜா என்பது பொருள் ராஜா, அரசன் எனும் பெயர் கொண்டவர்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்

சூரியனை குறிக்கக்கூடிய தானியமாக கோதுமை உள்ளது. சூரியனுக்கான உலோகம் செம்பு. செம்பு பாத்திரத்தில் கோதுமையைப் போட்டு 11 ரூபாய் சில்லறை காசுகளைப் போட்டு அருகில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு தானமாகக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். சூரிய கிரகணத்திற்குப் பிறகு கணவன், மனைவி தள்ளியிருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் கணவன் மனைவி சேர்ந்திருந்தால் இப்போது பிறக்கும் குழந்தைகள் கிரகண தோஷத்தில் பிறப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு உடம்பில் ஏதோ ஒரு பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

உணவு சாப்பிடக் கூடாது

இந்த சூரிய கிரகணம் சமயத்தில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது, உணவு சாப்பிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கிரகணம் ஏற்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிடுவது நல்லது. கிரகணம் முடிந்த பின்னர் குளித்துவிட்டு புதிதாக சமைத்து சாப்பிடலாம். ஒருநாள் முன்பு சமைத்த உணவுகள் போன்றவற்றை குப்பையில் போடுவது நல்லது. இது ஆரோக்கியத்தில் வரும் குறைபாடுகளைத் தவிர்க்கும்.

வெளிநாடு அரசியல்வாதிகளுக்கு கண்டம்

சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. அமெரிக்காவில் தெரிவதற்கான வாய்ப்புள்ளது. சூரிய கிரகணம் இங்கு தெரியவில்லை என்றாலும் முறையான அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பது நல்லது. வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கண்டம் ஏற்படும். 40 நாட்களுக்கு பொதுவாக பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+