Solar Eclipse 2026: சூரியகிரகணம் நிகழும் நேரம்?.. உலகில் ஏற்படப்போகும் பாதிப்பு - ஜோதிடம் கூறுவதென்ன
Solar Eclipse 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி அமாவாசை தினமான இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணம் எப்போது நிகழும், உலகில் ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன, பரிகாரம், கிரக நிலைகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் (Suriya grahanam).
ரிங் ஆஃப் ஃபயர் [Ring of fire]
ஜோதிடத்தில் கிரகண நிகழ்வானது மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணமாகும். சூரியனின் மையப் பகுதி மட்டும் நிழல் பகுதியில் வரும் வகையில் சந்திரன் சூரியனை மறைப்பதால் சூரியன் ஒரு வளையல் போன்று தோன்றும். இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படுகிறது.

சூரிய கிரகணம் [surya grahan 2026]
பிப்ரவரி 17 ஆம் தேதி அமாவாசை தினமான இன்று இந்த வருடத்தினுடைய முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. அண்டார்டிகா பகுதிகளிலேயே இந்த கிரகணம் தெரியும். பிப்ரவரி 17 ஆம் தேதியான இன்று இரவு 7.20 மணிக்கு மேல் ரிங் ஆஃப் ஃபயர் என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன் ஆகியோர் நேர்க்கோட்டில் உள்ளனர். 2 நிமிடம் 21 நொடிகளுக்கு இந்த கிரகணம் நிகழுகிறது.
இதில், சூரியனின் தாக்கம் பெரும் நெருப்பு பிழம்பாக சந்திரனை சுற்றி இருக்கும். இது மிகவும் அரிய நிகழ்வாகும். 30 வருடத்திற்கு ஒருமுறை தான் கும்பத்திற்கு சனி பகவான் வருகிறார். சூரியனோடு சனி சேர்கிறார் என்றாலே 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த சேர்க்கை கும்பத்தில் நடக்கும். ராகு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு ராசியில் இருக்கிறார். குரு பகவானுக்கு 12 வருடமாகும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இணையக்கூடிய இந்த ராகு, சனி ஆகிய கிரகங்கள் சூரியனின் நேர்க்கோட்டில் வருகின்றன.
நேர்க்கோட்டில் கிரகங்கள்
இன்றை தினம் கிரக அமைப்பானது ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். சூரியன், சந்திரன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய 5 கிரகங்களும் கும்பத்தில் இணைந்துள்ளனர். திருக்கணித முறைப்படி சனி பகவான் மீனத்தில் உள்ளார். ஆனால், வாக்கியப்படி சனி பகவான் கும்பத்திலேயே சேர்ந்திருப்பதால் இன்று 6 கிரக சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 3 கிரகங்கள் மட்டுமே வெளியில் உள்ளன. மகரத்தில் செவ்வாய், குரு மிதுனத்திலும், கேது பகவான் சிம்மத்திலும் உள்ளனர்.
சூரியகிரகணத்தால் வரும் பாதிப்பு?
சூரியனின் நேர்க்கோட்டில் ராகு, சனி உள்ளிட்ட கிரகங்கள் வருவதால் உலகளவில் ஏதாவது பெரிய தாக்கங்கள் ஏற்படும். மலைப் பகுதியில் நெருப்பினால் பாதிப்புகள் ஏற்படும். விமானங்களில் தீ விபத்து, மலைப் பிரதேசங்களில் நெருப்பு பிடிப்பது, மலைச்சரிவு போன்றவை ஏற்படும். செவ்வாய் சனியின் வீட்டில் இருப்பதால் மலைச் சரிவு குறைவாக இருக்கும்.
சனியின் வீட்டில் சூரியனும், ராகுவும் சேர்ந்திருப்பதால் மலைப் பிரதேசங்களில் நெருப்பு பிடிப்பது, மலைவாழ் மக்கள் பாதிக்கப்படுவது, காற்று வழியில் சிறு நோய்கள் பரவுவது, மலையில் இருக்கும் மிருகங்களுக்கு ஏதாவது ஆபத்து வருவது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பொதுவாகவே கிரகணம் என்றாலே அதனை தோஷம் என்று அழைப்போம். அங்காள பரமேஸ்வரிக்கு உரிய நாள் என்பதால் இந்த கிரகண நாளில் இறைவனை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். கிரகண காலத்தில் ஜெபம் செய்யும்போது மந்திரங்களுக்கு நல்ல சக்தி ஏற்படும்.
இன்று என்ன செய்ய வேண்டும்?
பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை சூரிய அஷ்தமனத்துக்குப் பிறகு குலதெய்வ வழிபாடுகளைச் செய்வது நம்முடைய எண்ணங்களை ஈடேறச் செய்யும். குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் வைக்கலாம். கிரகங்களில் பலம் கும்ப ராசியில் சேர்ந்துள்ளதால் இந்த காலகட்டத்தில் குலதெய்வ வழிபாடுகளைச் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். கோதுமை தானம் கொடுப்பது, தேங்காய் மட்டையை தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும்.
நவக்கிரகத்திற்கு சூரிய பகவானுக்கு தீபமேற்றி வழிபாடு செய்வது கிரகண தோஷத்தைப் போக்கும். கிரகணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுதலை பெறச் செய்யும். கும்பம், சிம்மம், ரிஷபம், விருச்சிக ராசியினர் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கண்டிப்பாக கோதுமை தானமாக அளித்து, கோவிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபாடு செய்வது நன்மை பயக்கும். கோதுமையை எடுத்து வைத்து பசுமாடுகளுக்கு தானமாக கொடுப்பதும் நல்லது.












Click it and Unblock the Notifications