Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் சனி சுக்கிரன் கூட்டணி.. குபேர யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகரம் ராசியில் செவ்வாயுடன் பயணம் செய்யும் காதல் நாயகன் சுக்கிரன் வரும் மார்ச் 7ஆம் தேதி முதல் கும்பம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி சுக்கிரன் கூட்டணி சேரப்போகிறது. இந்த கூட்டணியால் யாருக்கெல்லாம் குபேர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

ராஜயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சனியோடு சேர்ந்த சுக்கிரன் கோடீஸ்வர யோகத்தையும் தரப்போகிறார்.

Sukhran peyarchi palan 2024: Venus transit From Makaram to Kumbam


மேஷம்: குடும்ப ஸ்தான அதிபதி மற்றும் களத்திர ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் குரு உடன் கூட்டணி அமைக்கிறார். திடீர் பண வரவு அதிகரிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் மூலம் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். வாகன வசதி மேம்படும். கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது.

ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் இன்று முதல் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சனி உடன் இணைந்து சஞ்சரிக்கப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும்.

மிதுனம்: உங்கள் ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சனியோடு பயணம் செய்யப்போவதால் பணத்தட்டுப்பாடு நீங்கும், வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். தன வரவும் பணவரவும் அதிகரிக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம்.

கடகம்: அஷ்டம சனி காலமாக உள்ள இந்த நிலையில் சுக்கிரனும் இணைந்து எட்டாம் வீட்டில் மறைகிறார். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.

சிம்மம்:
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் சனி உடன் அமரப்போவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. அதிக பணம் வந்தால் கொஞ்சம் செலவும் வரும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். களத்திரகாரகன் பார்வை உங்கள் மீது படுவதால் எதிர்பாலினத்தவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லை எனில் சமூகத்தில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும்.

கன்னி: உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் சனியோடு சுக்கிரன் இணைவதால் உங்கள் உடல் நலனை கவனமாக பார்த்துக்கொள்ளவும். பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். பணிச்சுமை அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியுடன் இணைவதால் நல்ல வேலைகள் கிடைக்கும். பொருளதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது.

விருச்சிகம்: சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் சனி உடன் இணைந்து பயணம் செய்யப்போவதால் வேலை தொழிலில் புரமோசன் ஏற்படும். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். மேலதிகாரிகளின் பாராட்டு அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும்.

தனுசு: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சனியோடு இணையப்போவதால் காணாமல் போன பணம் கிடைக்கும். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. காதல் ஜோடிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மகரம்: சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தன ஸ்தானத்தில் சனியோடு பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கும்பம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். பண வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

மீனம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சனியோடு சுக்கிரன் குடியேறப்போகிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். பணவருமானம் அதிகரிக்கும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். சுப விரைய செலவு ஏற்படும். வீட்டிற்குத் தேவையான டிவி பிாிட்ஜ் ஏசி போன்ற பொருட்கள் வாங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+