பணத்தை கொட்டிக் கொடுக்கும் சுக்கிரன்.. ராஜாவாக வாழப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 புத்தாண்டில் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று திகதி சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவானின் இந்த இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்... (Sukiran peyarchi)
யார் ஒருவருடைய ஜாதகத்தல் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறாரோ அவருக்கு அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். பெயர், புகழ், பணம், அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு போன்ற எல்லாமே கைகூடும். செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தாலே போதும். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஆடம்பர கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார்.

அனைத்து விதமான சுக போகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் சுக்கிரன் பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. சுக்கிரன் உச்சத்தில் இருந்தாலே அவர்களுடைய வாழ்க்கையில் பணத்துக்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. அந்த வகையில், 2025 புத்தாண்டில் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று திகதி சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
சுக்கிர பகவானின் இந்த இடப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நிதி மற்றும் செல்வத்தில் உயர்வை கொடுக்கப் போகின்றார். அந்த வகையில், பண மழையில் நனையப் போகும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் (Sukiran peyarchi for mesham): சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி ஆவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தின் உடன் பணியாற்றும் சக ஊழியர்களின் ஆதரவு உண்டாகும்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வாழ்க்கை குறித்த ஒரு தெளிவு பிறக்கும். வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிகள் உண்டாகும்.. புதிய வீடு, கார், வாகனம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு பொன்னான காலம் என்றே சொல்லலாம். நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
மிதுனம் (Sukiran peyarchi for midhunam): சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வரப் போகிறது. சுக்கிர பகவானின் அருளால் நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை பார்ப்பீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நிதி சார்ந்த விஷயங்களில் அசுர வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் இந்த ஆண்டில் சுக்கிரனின் அருளால் சிறப்பான அனுபவங்களைப் பெறுவீர்கள். சேமிப்பு, முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள்.
விருச்சிகம் (Sukiran peyarchi for Viruchigam): சுக்கிர பகவானின் சதய நட்சத்திரப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் சாதகமான நற்பலன்கள் பலவற்றை தரப் போகிறது. சொந்த வீடு, வாகனம், சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு, முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த ஆண்டு முழுவதும் அதிக பணம் சேரும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications